ஆக்டினோசோவா
ākṭiṉōcōvā
ஆக்டினோசோவா (Actinozoa) ஆந்தோ சோவா (Anthozoa) என்றும் பெயர் கடற்சாமந்தி (Sea anemone), பவளம், கடற்பேனா முதலியவை இந்த வகுப்பைச் சேர்ந்தவை.
ஆக்டினோசோவா (Actinozoa) ஆந்தோ சோவா (Anthozoa) என்றும் பெயர் கடற்சாமந்தி (Sea anemone), பவளம், கடற்பேனா முதலியவை இந்த வகுப்பைச் சேர்ந்தவை. சிலென்ட்ரேற்றா (Coelenterata) என்னும் குழியுடலித் தொகுதியிலுள்ளவை. மெடுசா தலைமுறைநிலை இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இல்லை. இவற்றின் பாலிப்பு (Polyp) நிரம்பச் சிக்கலான அமைப்புள்ளது. மேல்தோல் வாய்ப்புறத்தில் மடிந்து உள்ளே போவதால் வாய்க்குழல் ஒன்று உண்டாயிருக்கிறது. இதற்கு ஸ்டோமொடீயம் (Stomodaeum) என்று பெயர். உள்ளறையில் பக்கங்களில் நெடுக்குத் திரைகள் பல உண்டு. இவை தடுக்குக்கள்போல உள்ளிருக்கும் வயிற்றறையைப் பல பாகங்களாகப் பிரிக்கின்றன. இத்தடுக்குக்கள் எண்ணிக்கையில் ஆறு அல்லது எட்டு முதன்மையாகத் தோன்றும். ஆகவே, முறையே ஆறு தடுக்குக்கள் உள்ளவை, எட்டுத் தடுக்குக்கள் உள்ளவை என இந்தவகைப் பிராணிகள் இரண்டு பெரிய கூறுபடும். ஆறு தடுக்குக் கூட்டத்தில், சிறு திரைகள் இடையே உண்டாவதால், 12 தடுக்குக்களையும், இவற்றிற்கு மேற்பட்ட தடுக்குக்களையும் காணலாம். பார்க்க: சிலென்டரேற்றா.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 346)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nj659u6y/
தமிழ்“ஆக்டினோசோவா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj659u6y/APA
Oliyon Research. (2026). ஆக்டினோசோவா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nj659u6y/MLA
"ஆக்டினோசோவா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nj659u6y/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment