வரிசை

varicai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலவகையும் ஒவ்வொன்றாக இருக்கும் ஒழுங்கான அமைப்பு. — serial, order
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரிசை)
2.
உயிரியல்: உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. வகுப்புக்கு கீழாகவும் குடும்பத்துக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
நம் பற்கள் வரிசையாக அமைந்துள்ளன.
அவனின் பல் வரிசை, அழகாக அமைந்துள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரிசை)
3.
ஒழுங்கு, மேம்பாடு, உயர்வு, நற்சீர், பரிசு, முறைமை, பட்டம், சிறப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 365)
4.
கணினியின் செயற்பாட்டுக்கு உட்படுவதற்கு வரிசையில் காத்திருக்கும் இனங்களின் குழுமம். எடுத்துக்காட்டு : ஒரு தரவு அனுப்பீட்டுப் பொறி யமைவில் அனுப்பப்பட இருக்கும் செய்திகள். இனங் களின் வரிசைமுறையானது, செய்முறை முந்துரிமையை நிருணயிக்கிறது — queue
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சாரை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1199)
5.
1. ஒரு வரிசையின் ஒரு வரியின் கிடைமட்ட எழுத்துகள். 2. துளையிட்ட அட்டையில் துளையிட்ட நிலையிடங்களில் கிடைமட்ட வரிகளில் ஒன்று. 3. ஒரு மின்னணுவியல் விரிதாளில் செங்குத்துப் பகுதிகள். நெடுவரிசைகளும் (columns) கிடைவரிசைகளும் சேர்ந்து அதில் விரிதாள் அச்சு வார்ப்புருவாக அமைகின்றன — row
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1271)
6.
ஆவர்த்தன அட்டவணையிலுள்ள கிடை மட்ட வரிசைகளில் ஒன்று. 2. அலைவுநேரம்: ஓர் அலைவின் முழுச்சுற்றுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், 3. காலம்: — period - 1
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/necganc7/

தமிழ்
“வரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/necganc7/
APA
Oliyon Research. (2026). வரிசை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/necganc7/
MLA
"வரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/necganc7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment