படிக அக உராய்வு
paṭika aka urāyvu
படிகங்களின் எந்திரவியல் பண்புகளை அவற்றின் மின்னியல் அல்லது காந்தவியல் பண்புகளை விவரிப்பதைப் போலவே விளக்கலாம்.
படிகங்களின் எந்திரவியல் பண்புகளை அவற்றின் மின்னியல் அல்லது காந்தவியல் பண்புகளை விவரிப்பதைப் போலவே விளக்கலாம். மின்கடவா மாறிலி அல்லது காந்த உட்புகு திறனை ஒத்த வகையில், படிகத்தின் மீள் திறன் மாறிலி பங்கு பெறுகிறது. படிகங்களின் மீது விசைகளைச் செலுத்தும் போது, அவற்றில் உருக் குலைவு ஏற்படுகிறது. ஒரு தகைவைச் செலுத்தும் போது, அவற்றில் திரிபு ஏற்படுகிறது. இத்தகைய ஒரு படிகத்தின் எந்திரவியல் நடத்தை, அதிலுள்ள அணுக்களுக்கிடையேயான விசைகளையும் சார்ந்து இருக்கிறது. எந்திரவியல் ஆய்வுகளில், அவற்றை உடனடியாக நிகழ்கிறவையாகக் கருதலாம். இதற்கு மாறாக இடப் பெயர்ச்சி அல்லது பிழைகளின் இயக்கத்தால் தோன்றும் திரிபு நிகழ ஒரு குறிப்பிட்ட காலம் ஆகிறது. எந்திரவியல் கிளர்வுகளின் போது, ஆற்றல் இழப்புச் செயல் முறைகளையோ, உள்ளிட உராய்வையோ உண்டாக்குகிற பிழைகள் இல்லாத படிகத்தைக் கருத்தியல் படிகமாக (Ideal Crystal) வரையறுக்கலாம், ஒரு கருத்தியல் படிகத்தின் மீது σ என்னும் தகைவைச் செலுத்தும் போது, தோன்றுகிற திரிபு விளைவு Ee = σ/G இதில் G என்பது படிகத்தின் மீள் திறன் குணகம் எனப் படுகிற மாறிலி தகைவுக்கும், திரிபுக்கும் இடையிலான இந்த உறவைப் படிகத்தின் ஒரு பருமக் கூறுக்கான நியூட்டன் விதிகளுடன் இணைத்தால், இயக்கச் சமன்பாடுகளுக்கு ஆற்றல் இழப்பு இல்லாத தள அலைத் தீர்வுகள் கிடைக்கும்.
உண்மையான படிகங்களில் பிழைகள் ஏற்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட தகைவுக்கு, ஒரு தனித் தன்மையான சம நிலை மதிப்புள்ள திரிபு ஏற்படுகிற வகையில், திரிபில் பிழையின் பங்களிப்பு நேர் போக்குத் தன்மையில் இருந்து, ஆனால், ஒரு தன்னியல்பான நேரம் கடந்த பிறகே தோன்றுவதாகவும் இருக்குமானால், படிகத்திற்கு மீள் தன்மை இல்லை என்று சொல்லப் படும். ஒரு சைன் கோட்டு வடிவமுள்ள வெளித் தகைவைச் செலுத்தும் போது, காலம் தாழ்ந்து தோன்றும் திரிபு E விளைவு எனில், அதன் ஒத்த கட்டத்திலுள்ள உண்மையான பகுதி ER காரணமாக, மீள் திறன் குணகத்தில், ΔG என்னும் விளைவுறு மாற்றம் தோன்றும். Eஇன் ஒவ்வாக் கட்டத்திலுள்ள கற்பனைப் பகுதியான E₁ காரணமாக Q–1 என்னும் ஆற்றல் இழப்பு அல்லது அக உராய்வு ஏற்படும். இவற்றைப் பின் வரும் சமன்பாடுகளிலிருந்து பெறலாம். \frac {\Delta G}{G} = \frac {GE_R}{\sigma_0}; Q^{-i} = \frac {GE_i}{\sigma_0} பல வேளைகளில் திரிபு விளைவு டீபை (Debye) வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அதற்குப் பின் வரும் சமன்பாடுகள் பயன் படும். \frac {\Delta G}{G} = \frac {\Delta R}{1 + (wt)^2} ; Q^{-i} = \frac {\Delta R w t}{1+(wt)^2} இதில் ΔR என்பது தளர்வு வலிமை (relaxation strength) என்பது செலுத்தப் பட்ட ω தகைவின் கோண அதிர்வெண் t என்பது திரிபின் காலம் தாழ்த்திய, மீள் திறனற்ற கூறுக்கான தளர்வு நேரம். ωt= 1 எனும் நிலையில் அக உராய்வு பெருமளவை எட்டும். உடல் மையக் கன சதுர இரும்பில், கார்பன் மாசுகளில் ஏற்படும் ஸ்நோயக் தளர்வு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. உடல் மையக் கன சதுரப் படிகங்களில் (Body centered cubic crystals) மாசுகள் சாதாரணமாக, எண்முகத் தளங்களில் அமர்கின்றன. அவற்றுக்கு நாற்கோணச் சமச் சீர்மை ஏற்படும். அவை அமர்ந்த இடத்தைப் பொறுத்து, நாற் கோணச் சமச் சீர்மை அச்சு x, y, z திசைகளில் ஏதாவது ஒன்றில் அமையும். இவற்றில் ஏதாவது ஒரு திசையில், ஒரு தகைவைச் செலுத்தினால், தலங்களின் சமத் தன்மை மறைந்து, கார்பன் அணுக்கள் விரவல் மூலம் குறைந்த ஆற்றல் தளங்களில் இறங்கி விடும். இதன் காரணமாகத் தகைவு செலுத்தப் பட்ட நிலையில், படிகத்தின் நீளம் மாறுகிறது. அதனால், ஒரு மீள் திறனற்ற திரிபு தோன்றுகிறது. அதற்கு, ஒரு தன்னியல்பான நேரத் தாழ்வு உண்டு. அந்த நேரத் தாழ்வு தலங்களுக்கிடையில், கார்பன் அணுக்கள் விரவ எடுத்துக் கொள்ளும் நேரத்தைப் பொறுத்தது. (lll) திசையில் ஒரு தகைவைச் செலுத்தினால், விளைவு ஏதும் தோன்றாது. இந்த தகைவு x, y, z ஆகிய மூன்று திசைகளிலும், ஒரே அளவான உருக் குலைவை ஏற்படுத்துவதே இதற்குக் காரணம். தளர்வு வலிமையைச் செலுத்தப் பட்ட தகைவின் திசையும், இடையிட அணுக்களின் எண்ணிக்கையும் வரையறுக்கின்றன.
படிகங்களின் ஒட்டு மொத்தமான மீள் திறன் நடத்தையை, எளிய படங்களின் உதவியுடன் வகைப் படுத்தலாம். புள்ளிப் பிழைகளும், இட மாற்றங்களும் அடங்கிய ஒரு படிகத்திற்கு EP என்னும் புள்ளிப் பிழைத் திரிபும், Ed என்னும் இட மாற்றத் திரிபும், Ea என்னும் மீள் திறன் திரிபும் ஏற்படும். புள்ளிப் பிழைத் திரிபு பாரா மீள் திறன் (para elastic) தன்மையுள்ளதாக, அதாவது, ஸ்நோயக் விளைவில் காணப் படுவதைப் போன்ற வெப்ப ஏற்ற இறக்கங்களின் உதவியுடன், நிலையான இரு முனைகளின் சமான இருப்பிடங்களுக்கிடையில், தகைவின் காரணமாகத் தோன்றும் சுழற்சியாக இருக்கலாம். அல்லது உலோகங்களின் இடையிடங்களில் ஏற்படுவதைப் போன்ற, அகத் திரிபு ஒன்றை உண்டாக்குகிற தூண்டப் பட்ட ஒரு இரு முனையாக, டயா மீள் தன்மையுள்ளதாக (dia elastic) இருக்கலாம். புள்ளிப் பிழைகள் என்னும் வடிவக் குறியீட்டில் ஃபோனான்கள், எலெக்ட்ரான்கள் ஆகியவற்றின் விளைவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இடம் மாற்றுத் திரிபு ஒரு டயா மீள் திறன் விளைவு பொதுவாக, அதற்கு ஒரு நிறை பதம் தேவை. இடம் மாற்று அடர்வு (dislocation density) A, பர்ஜரின் திசையன் (burgers vector) b சராசரி இட மாற்று இடப் பெயர்ச்சி எனில், இடம் மாற்றுத் திரிபு Ed = Aby.
Y எனும் இடப் பெயர்ச்சியை, இடம் மாற்று இயக்கச் சமன்பாடான MY + BY + KY = bσ என்பதிலிருந்து பெறலாம். இதில் M=Pb2. இது அலகு நீளத்தில் இட மாற்றம் அடையும் நிறை; B என்பது இட மாற்றுப் பாகியல் எண் (dislocation viscosity) K என்பது இட மாற்றத்திற்கான ஒரு மீட்டு வரும் விசை மாறிலி. மேற்சொன்ன சமன்பாடுகளை ஒப்பிட்டு Md, Bd , Kd ஆகிய மாதிரி மதிப்புகளை, M, B, K ஆகியவற்றை Ab² ஆல் வகுப்பதன் மூலம் பெற முடியும். B மிகச் சிறியதாக இருக்கும் போது, Ed என்னும் திரிபு ஓர் ஒத்ததிர்வு பண்பைப் பெற்றிருக்கும். ஆனால், B பெரியதாயிருக்கும் போது, சடத்துவ விளைவுகளைப் புறக்கணித்து விட்டு, ΔR = AGb²/Kd ; t=Bd/Kd ஆகியவற்றுடன் கூடிய ஒரு தளர்வைப் பெறலாம். B, K ஆகிய குணகங்கள் நிகழ்வுகளின் காரணமாகத் தோன்றும். வேறு பல பிழைகளுடன் இடமாற்று விளைவுகள் செய்யும் இடைவினைகளின் மூலம் அவை தோற்றுவிக்கப் படலாம். EP என்னும் புள்ளிப் பிழைத் திரிபுக்கான, ஒத்த அளவுகளுடன், அவற்றுக்குத் தொடர்புள்ளது.
பொதுவாகவே, இட மாற்றங்கள் இல்லாத ஒரு படிகத்தில், கேளா ஒலி சறுக்கு அலைகளைத் தணிக்கின்ற, எந்த ஒரு செயல் முறையும் இட மாற்றங்களை, ஒரு பாகியல் இழுப்பின் மூலம் தடைசெய்யும். ஓர் அசையும் இட மாற்றம் படிகத்தில் ஒரு சதுக்கத் திரிபு வீதத்தை உண்டாக்கும். ஃபோனான்கள், எலெக்ட்ரான்கள், புள்ளிப் பிழைகள் ஆகியவை K என்னும் இழுப்பைத் தோற்றுவிக்கின்றன. இடமாற்ற இழு விசை நகராத, நேர் கோட்டில் அமைந்த இரு முனைப் புள்ளிப் பிழைகள் ஆகியவை B என்னும் மீட்டு வரும் விசை மாறிலியைத் தோற்றுவிக்கும். 10-2 முதல் 1012 HZ வரையான அதிர்வெண் நெடுக்கத்தில், இட மாற்று அக உராய்வு விளைவுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. 1012 முதல் 10-2 வரையான புள்ளிப் பிழைச் செறிவு நெடு நெடுக்கத்திலும், அவை காணப் பட்டுள்ளன. —கே.என். ராமசந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 460)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/na4n9n95/
தமிழ்“படிக அக உராய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/na4n9n95/APA
Oliyon Research. (2026). படிக அக உராய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/na4n9n95/MLA
"படிக அக உராய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/na4n9n95/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment