19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர், தொண்டை நாட்டு அமரம்பேடு என்னும் ஊரைச் சார்ந்தவர். அராபியக் கதையினைத் தமிழ் மொழியில் பெயர்த்தார். சகர் சாத் சக்ரெயார் என்னும் மன்னனுக்கு 1001 இரவுகளில் சொன்ன இன்பச் சுவை மிக்க கதைகள் அரபுக் கதைகள் என்று கூறப்படும். இவை அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. அக்கதைகளின் சுவை கருதித் தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டன. ‘ஆயிரத்தோரு இரவுகளிற் சொல்லிய அரபுக் கதைகள்’ என்னும் அந்நூல் பல பகுதிகளாக வெளியிடப்பட்டது.