ஆதிக்குடியினர் வடஅமெரிக்கச் சமவெளிகளின் மிகப் பெரிய நாடோடிக் குழுக்களாவர். இவர்கள் எருமைகளை வேட்டையாடுபவர்களாகவும் திகழ்கின்றனர். இவர்கள் அமெரிக்கத் தோல் வணிகர்களால் ‘அரபாகோ’ (Arapaho) என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். பச்சைக் குத்துபவர்கள் என்ற பொருளில் இவர்களுக்கு இப்பெயர் உண்டானது என்றும் கருதுகின்றனர். அரபாகோ ஆதிக்குடியினர் இன்று இரு குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மையோர் வேட்டையாடும் சிறு குடும்பக் குழுக்களாகவே காணப்படுகின்றனர். இக்குழுவினர் அனைவரும் அல்கான்சியன் மொழியைப் பேசுகின்றனர். வேட்டையாடப்பட்ட எருதுகளின் இறைச்சி உணவாகவும் தோல் உடையாகவும் கூடாரத்தின் உறையாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எருதுகளின் கொம்புகளும் எலும்புகளும் இவர்களுக்கு வேண்டிய கருவிகள் செய்யப் பயன்படுகின்றன. இவர்களின் பொருளாதாரம் தோட்டப் பயிரிடுதலை அடிப்படையாகக் கொண்டதாகும். காய்கறிகள், சிறு தானியங்கள் முதலானவையே பெரும்பான்மையாக விளைவிக்கப்படுகின்றன. பயன்படுத்தப்படாத தங்களின் விளை நிலங்களை வெள்ளையர் பயிரிட விட்டுவிடுகின்றனர். வெள்ளையரிடமிருந்து கிடைக்கும் பொருள்களையே இவர்கள் பெரிதும் சார்ந்திருக்கின்றனர். அரபாகோ அரபாகோ பழங்குடித் தலைவன் வீடுகள்மிக எளிமையானவை. அருகிலுள்ள வெள்ளையரின் பண்பாட்டுத் தாக்கத்தினால் வெள்ளையரின் சமூக அமைப்பினை ஏற்று வருகின்றனர். அரபாகோவினரின் சமயம் உருவமில்லாத் தெய்வ ஆற்றலில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஒரு பட்டையான குழாயும் சக்கரம் ஒன்றும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மேலும், விழாக் காலங்களில் நான்கு நாட்கள் வரை நடனமும் நாட்டியங்களும் நடைபெறுகின்றன. இந்நடனங்களில் இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்ளுதல், இக்காலத்தில் அங்கு வாழும் நகரம் சார்ந்த இந்தியர் வாழ்க்கை முறையைத் தெளிவாகக் காட்டுகின்றது. அரபாகோவினர் எப்பகுதியில் வாழ்ந்தாலும் இவ்விழா நடக்கும் போது அங்குவந்து கலந்து கொள்வர். அவர்கள் இன ஒற்றுமையை அடையாளம் காட்டுவதற்கு இவ்விழா நடைபெறுகிறது. திருமணம் அரபாகோ குடிகளுக்குள் பொதுவாக நடைபெறும். எனினும் இதற்கு மாறாக ஏற்படும் திருமணத்தினால் பிறக்கும் குழந்தைகள் ‘அரபாகோ’ சமூகத்தினரிடையே வளர்வதால் இக்குடியைச் சார்ந்த தோற்றத்தையே பெறுகின்றனர்.