குறியீட்டு மொழி

kuṟiyīṭṭu moḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உரைக் கோப்பில் உரைப் பகுதியை எந்த வடிவமைப்பில் அச்சுப்பொறியிலோ அல்லது திரைக் காட்சி யாகவோ வெளிக்காட்ட வேண்டும், எவ்வாறு வரிசைப்படுத்தி அதன் உள்ளடக்கத்தை தொடுத்துக் காட்டவேண்டும் என கணினிக்கு அறிவுறுத்தும் குறியீடுகளின் தொகுதியைக் கொண்ட மொழி. (எ-டு) மீவுரைக் குறியீட்டு மொழி (HTML) வலைப்பக்கங்களை வடிவமைக்கப் பயன்படுகிறது. 2. செந்தரப் பொதுமைக் குறியீட்டு மொழி (SGML) அச்சுக் கோத்தல் மற்றும் கணினிப் பதிப்பகப் பணிகளுக்கும் மின்னணு ஆவணங்களுக்கும் பயன்படுகிறது. இது போன்ற குறியீட்டு மொழிகள் பணித்தளம் சாரா ஆவணங்களை/கோப்புகளை உருவாக்கப் பயன்படு கின்றன. பல்வேறு பயன்பாடு களுக்கிடையே கையாண்டு கொள்ளவும் வழி செய்கின்றன. — markup language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 905)
2.
கணினி அமைப்பின் உள்ளீட்டு மொழியாக இல்லாத எழுத்துகள், எண்களால் உருவாக்கப்பட்ட போலி மொழி. புனைவு மொழி (Fabricated Language) என்றும் அழைக்கப்படும் — symbolic language
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1409)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnrre7cq/

தமிழ்
“குறியீட்டு மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnrre7cq/
APA
Oliyon Research. (2026). குறியீட்டு மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mnrre7cq/
MLA
"குறியீட்டு மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnrre7cq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment