அக்கிலீசு
akkilīcu
ஒரு கிரேக்க வீரன். இவன் இலியாது (Iliad) என்னும் கிரேக்கப் பெருங்காப்பியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளவன்.
ஒரு கிரேக்க வீரன். இவன் இலியாது (Iliad) என்னும் கிரேக்கப் பெருங்காப்பியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளவன்.
தேட்டியசு (Tatius) என்னும் கடல் தெய்வத்தைத் தாயாகவும், பிலியசு (Peleus) என்றும் சிற்றரசனைத் தந்தையாகவும் கொண்டவன் அக்கிலீசு
(Achilles). தன் மகன் சாகா வரம் பெறவேண்டுமென்ற ஆவலோடு பாதாள உலகில் ஓடிய ஓர் அதிசய ஆற்றில் அவனை அழுத்தி எடுத்தாள் தேட்டியசு. மகனின் குதிகால்களைத் தன் இரு கைகளால் பற்றிக்கொண்டு தலைகீழாக அவனை ஆற்றிலிட்ட போது, அவன் சாகாத் தன்மையைப் பெற்றான். எனினும், அவன் கைகள் பற்றிய குதிகாற்பகுதிகள் அதிசய நீரில் நனையவில்லை. அக்கிலீசின் இறப்பு, அந்தப் பகுதியில் எதிரியின் அம்பு பாய்வதால் ஏற்படும் அபாயம் உருவாகியது. இதனை அறியாத தாய் தன் மகன் பாதுகாப்புப் பெற்றமை குறித்து மகிழ்ச்சியடைந்தாள்.
போர்க் கலைகளில் தேர்ச்சி பெற்ற அக்கிலீசு, வலிமை, விரைந்து செயல்படல், துணிவு முதலியவற்றிற்காகப் பாராட்டப்பெற்றான்.
அக்கிலீசு
எலன் (Hellen) என்னும் அழகிய பெண்ணைக் கவர்ந்து சென்ற பாரிசு (Paris) என்ற இளவரசனைத் தண்டித்து, எலனை மீட்டுவரக் கிரேக்கப் பெரும் படை திராய் (Troy) என்ற நகரை நோக்கிப் புறப்பட்டது. கிரேக்கர் தம் பக்கம் அக்கிலீசு சேர்ந்தால் போரில் வெற்றி வாய்ப்பு ஏற்படும் என்றெண்ணித் தம் படையோடு வந்து சேர்ந்துகொள்ளும்படி அக்கிலீசை வேண்டினர். அக்கிலீசும் கிரேக்கர் பக்கம் சேர்ந்தான். பல சிக்கல்கள், போர்கள் ஆகியவற்றை அக்கிலீசு சந்தித்துத் தன் வீரத்தை நிலைநாட்டினான். இறுதியில் நடந்த போரில் அப்பல்லோ(Apollo) என்ற தெய்வத்தின் துணையோடு பாரிசு, அக்கிலீசின் உடல்வலிமையற்ற பகுதியான குதிகாலில் அம்பைப் பாய்ச்சியதால் அவன் இறந்துபட்டான்.
அக்கிலீசின் இணையற்ற வீரத்திற்குப் பாராட்டுக் கிடைத்தது, மேலும், மனிதனின் வலிமையற்ற உடற்பகுதியை ‘அக்கிலீசின் குதிகால்’ (Achille's heel) என்று கூறும் வழக்கமும் உண்டாயிற்று.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 45)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mmjmh8ga/
தமிழ்“அக்கிலீசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mmjmh8ga/APA
Oliyon Research. (2026). அக்கிலீசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mmjmh8ga/MLA
"அக்கிலீசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mmjmh8ga/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment