பொருள்களை முறித்து (fracture), அதனால் அறியப் படும் ஓர் எந்திரப் பண்பு நொறுங்குமையாகும். இந்நொறுங்குமை ஏற்படுவதற்கு முன், பொருள்கள் நீட்சி, உருச் சிதைவு அடையத் தயார் (plastic deformation) நிலையில் இருக்கும். பல பொருள்கள் உருச் சிதைவு நிகழ்ந்து, நீட்சி தன்மை அடையும் முன்பே உடைந்து விடும்.இந்நிலையே நொறுங்கு நிலை (brittle state) எனப் படுகிறது.அன்றாடம் பயன் படுத்தும் பொருள்களில் பல அதிக நொறுங்கு தன்மை வாய்ந்தவை. எ-டு: வார்ப்பிரும்பு, கண்ணாடி, காறைக் கட்டி (concrete block) முதலியவை. நொறுங்குமை மிகுந்த பொருள்கள் நீட்சி தன்மையைப் பெற்றிரா. எனவே, நீட்சித் தன்மையைப் பெறாப் பொருள்கள் நொறுங்குமைப் பொருள்கள் எனலாம். ஏனெனில், அவற்றைக் கம்பியாக நீட்டவோ, தகடுகளாக ஆக்கவோ இயலாது. இயல்பாக, நொறுங்கு தன்மை பெற்ற பொருள்களின் இழுவைத் (tensile strength) திறன், அப்பொருள்களின் அழுத்தத் திறனில் (compressive strength) மிகக் குறைந்த பின்னமாகவே இருக்கும். —வெ. ஸ்ரீதர்