சென்ட்டாரஸ்
ceṉṭṭāras
தென் வானக் கோளத்தில் உள்ள பெரிய விண் மீன் குழுவான சென்ட்டாரஸ் (Centaurus) விண் மீன் குழு, பகுதி மனித உருவிலும், பகுதி குதிரை அமைப்பிலும், உள்ள ஓர் உருவமான கிரேக்கப் புராணக் கதைகளில் இடம் பெறும் இனத்தின் பெயரே இக்குழுவிற்குப் பயன் படுகிறது.
தென் வானக் கோளத்தில் உள்ள பெரிய விண் மீன் குழுவான சென்ட்டாரஸ் (Centaurus) விண் மீன் குழு, பகுதி மனித உருவிலும், பகுதி குதிரை அமைப்பிலும், உள்ள ஓர் உருவமான கிரேக்கப் புராணக் கதைகளில் இடம் பெறும் இனத்தின் பெயரே இக்குழுவிற்குப் பயன் படுகிறது. பால் வழி (milky way) வரையிலும் இக்குழு பரவியிருக்கிறது. இக்குழுவில் உள்ள α–3 என்ற விண் மீன்கள் முதல் ஒளித் தர விண் மீன்களாகும்.. இவற்றில் α–சென்டாரி (α–Centauri) மூன்று விண் மீன்களின் கூட்டிணைப்பு ஆகும். இது 4.3 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இக்கூட்டிணைப்பின் ஒளித் தரம் முறையே +0.04, 1.1,7, 10.68 ஆகும். இவற்றில் மிக வெளிச்சமுள்ள விண் மீன், நிற மாலையிலும், பொருண்மையிலும் சூரியனை ஒத்துள்ளது. இதில் உள்ள மூன்றாம் விண் மீனை 1915ஆம் ஆண்டு ஆர். டி. எ. இன்னஸ் என்பார் கண்டு பிடித்தார். β–விண்மீன் ஓர் இரும விண் மீன் (binary star) ஆகும். இதன் ஒளித் தரம் முறையே 0.8, 4.0 ஆகும். α, β ஆகிய விண் மீன்களை இணைக்கும் கோடு தென் சிலுவை (Southern Cross) விண் மீன் குழு வழியாகச் செல்கிறது. மேலும், இக்குழுவில் ஒமேகா சென்ட்டாரி (ω-Centauri) என்ற கோளக விண் மீன் முடிச்சுகளும் (globular cluster), கதிர் வீச்சு மூலங்களும், எக்ஸ் கதிர் இரும சென்ட்டாரஸ் 3உம் உள்ளடங்கியுள்ளன.
கோளக விண் மீன் முடிச்சுகள் 2,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. இதில் 167 மாறு விண் மீன்கள் உள்ளன. சென்ட்டாரஸ் விண் மீன் குழு வானக் கோளத்தில் 1060 சதுரப் பாகைகள் இடத்தை நிரப்பிக் கொண்டுள்ளது. —பெ. வடிவேல்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 924)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9sdrg2d/
தமிழ்“சென்ட்டாரஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m9sdrg2d/APA
Oliyon Research. (2026). சென்ட்டாரஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9sdrg2d/MLA
"சென்ட்டாரஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m9sdrg2d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment