சூளை
cūḷai
நீற்றுதல் வினை நிகழ்வதற்குப் பயன்படும் வெப்பக் கலனாகிய சூளைகள் சுழல் வகை, செங்குத்தான வகை என இரு வகைப்படும்.
நீற்றுதல் வினை நிகழ்வதற்குப் பயன்படும் வெப்பக் கலனாகிய சூளைகள் சுழல் வகை, செங்குத்தான வகை என இரு வகைப்படும். சுழலும் சூளை சிமெண்ட் தயாரிப்பில் பயனாகிறது. இச்சூளை (படம் 1) 160 மீ. நீளமுடையது. கீழ்ப் பகுதியில் எண்ணெய் அல்லது கரியை எரித்து உருவாக்கப்பட்ட சுடர் மேல் நோக்கிப் பாய்கிறது. சிமெண்ட் தயாரிப்பின் மூலப் பொருள்களான சுண்ணாம்பும், களிமண்ணும் அடங்கிய சேற்றுக் குழம்பு சூளையின் மேல் பகுதியிலிருந்து புவி ஈர்ப்பாலும், சூளையின் சுழற்சியாலும் சரிந்து விழுகிறது. சூளையின் மேல் பகுதியில் சேறு உலர்த்தப் பட்டு, மைய மற்றும் கீழ்ப் பகுதிகளில் நீற்றுதலுக்குள்ளாகிறது. உலர்த்தும் பகுதியில் எஃகு சங்கிலிகள் அமைக்கப்பட்டு, வெப்பப் பரிமாற்றம் விரைவாக்கப் படுவதால், எரி பொருள் திறன் மிகுதியாகிறது. குளையின் உட்பகுதியின் இடைவெளிகளில் வெப்ப மின் இரட்டைகள் நிறுவப் படுகின்றன. இதனால், சூளையின் எப்பகுதியிலும் திண்ம நிலைப் பொருள்கள் மற்றும் வெளி வரும் சூளை வளிமங்களின் வெப்ப நிலைகளை நன்கறியலாம். மூலப் பொருள்களின் நுழை வாய்ப் பகுதியில், வளிமங்கள் வெளியேறுகின்றன. சூளையின் அடிப் பகுதியிலிருந்து சிமெண்ட் கட்டிகள் விழுகின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சுண்ணாம்புச் சூளைகள் பெரும்பாலும் செங்குத்து நிலை கொண்டவை. இச்சூளைகளில் நிலவும் வெப்ப நிலை வரம்பு 982–1260°C. வினையின் விரைவைக் கூடுதலாக்குவதற்கும், சுட்ட சுண்ணாம்பு மறு கார்பனேற்றம் ஆகாமல் தடுப்பதற்கும், நீற்றுதலில் வெளியாகும் கார்பன் டைஆக்சைடைச் சூளையிலிருந்து விரைவாக வெளியேற்ற வேண்டும். பெரும்பாலான சுண்ணாம்புக் காளவாய்கள் எதிரோட்டத்தில் (counter current) இயங்குகின்றன. மூலப் பொருள்களின் பாய்வு திசையும், வெப்ப ஆற்றலின் பாய்வு திசையும் ஒன்றுக்கொன்று எதிராக அமைந்துள்ளன. இச்சூளைகளைப் பெட்ரோலிய எண்ணெய், நிலக்கரி அல்லது எரி வனிமம் ஆகியவற்றால், நேரடியாகச் சூடு படுத்தலாம். உற்பத்தித் திறனும், சுண்ணாம்பின் தரமும், எரி பொருளின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகின்றன.---->
அமெரிக்காவில், சுண்ணாம்புத் தயாரிப்புக்குச் சுழல் வகைச் சூளைகளே பயன்படுகின்றன. சுழல் வகைச் சூளைகளில், உற்பத்தி கூடுதலாகவும் (நாளொன்றுக்கு 600 டன்), இயக்குவோரின் எண்ணிக்கை குறைவாகவும் அமையும். செங்குத்துச் குளைகளில், எரி திறன் கூடுதலாகவும், தொடக்கமுதலீடு குறைவாகவும் இருக்கும். செங்குத்துச் சூளைகள் சுழல் வகைச் சூளைகளைப் போன்று, மிகச் சிறிய சுண்ணாம்புக் கற்களை நீற்றுவதற்கு ஏற்றவையல்ல.
தொன்று தொட்டுப் பயன்படுத்தப் பட்டு வரும் இவ்விரு வகைகளுடன் புதிய சூளை வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சுண்ணாம்புக் கல் வகைகளுள் பலவும், சூளை வெப்ப நிலை வரம்புகளில் நொறுங்கித் தூளாகிக் கையாள்வதற்குத் தகுதியற்றவையாகின்றன. இச்சிக்கலுக்குத் தீர்வு காண நகரும் படுகைச் சூளை (moving grate kiln) எனும் வகை உருவாக்கப் பட்டுள்ளது. கால்சிமடிக் சுழலும் கனப்புச் (calcimatic rotatory hearth kiln) சூளையில் சுண்ணாம்புத் தளம் நகர்வதில்லை. மாறாக, பல எரிப்பிகளை அமைத்து, வெப்ப நிலைப் பரவல் சீராக்கப் படுகிறது. நுண்ணிய படிகங்களாக அமைந்துள்ள சுண்ணாம்புக் கல்லை நீற்றுவதற்குப் பாய்ம–திண்மச் சூளை (fluo-solids kiln) பயனாகிறது. கருத்துப் படிம வாயிலாக ஆய்ந்தறியப்பட்ட சூளை உற்பத்தித் திறனைக் கூடுதலாக்க முயன்றால், மீ நீற்றுதலுக்கும், குறை நீற்றுதலுக்கும் உட்பட்ட பொருள்கள் சமச் சீரற்ற கலவையாக வெளி வரும்.
பீங்கான் பொருள்களை இறுதி இறுக்கம் செய்வதற்குக் குகைச் சூளை (tunnel kiln) பயனாகிறது. இறுகாத நிலையிலுள்ள பீங்கான் அமைப்பை ஒரு கூட்டில் வைத்து, சூளையின் ஒரு முனையிலிருந்து, மற்றொரு முனைக்கு இழுத்துச் செல்ல வேண்டும். சூளையின் வெப்ப நிலை ஒரு முனையிலிருந்து, மையப் பகுதியை அடையும் வரை உயர்ந்து கொண்டேபோய், மற்றொரு முனைக்குச் செல்கையில், மீண்டும் சரிகிறது (படம் 6). வெப்ப நிலை உயருதலும், குறைதலும் படிப்படியாக நிகழ்வதால், பீங்கான் பொருள், திடீர் வெப்ப அதிர்வுக்கு உள்ளாவது தடுக்கப்படுகிறது. இவ்வகைச் சூளைகளின் நீளம் 25–170 மீ. வரம்பிலும், குறுக்களவு 3 X 2.6 மீ.² எனவும் அமைந்துள்ளன.
—மே ரா. பாலசுப்பிரமணியன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 709)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m8xhrknc/
தமிழ்“சூளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m8xhrknc/APA
Oliyon Research. (2026). சூளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m8xhrknc/MLA
"சூளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m8xhrknc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment