துணைக்கோள்

tuṇaikkōḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோள் ஒன்றை, ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றி வரும் பொருளை துணைக்கோள் எனலாம். புவிக்கு, இயற்கையிலேயே அமைந்த துணைக்கோள் நிலவு ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (துணைக்கோள்)
2.
ஒரு கோளினைச் ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு கோள். பூமிக்கோளத்தை சந்திரன் சுற்றி வருவதால் சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆகும் — secondary planet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 551)
3.
துணை நிலா. இது இயற்கைநிலா, செயற்கைநிலா என இருவகைப்படும். திங்கள் புவியின் இயற்கைநிலா. புவி முதலிய கோள்களை வலம் வருபவை செயற்கை நிலாக்கள். பணியின் அடிப்படையில் அவை முக்கியமாக மூன்று வகைப்படும் — satellite
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 381)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m8m5t8r5/

தமிழ்
“துணைக்கோள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8m5t8r5/
APA
Oliyon Research. (2026). துணைக்கோள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m8m5t8r5/
MLA
"துணைக்கோள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m8m5t8r5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment