அசனாலெப்பைப் புலவர்
acaṉāleppaip pulavar
இலங்கையில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.
இலங்கையில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பெயர் சுல்தான் முகையிதீன். காலம் கி.பி. 1870-1918. இவர் ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். இலங்கை அரசுத் துறையில் எழுத்தராகப் பணியாற்றிய முதல் இசுலாமியத் தமிழர் இவரே என்பர். இவரது நெருங்கிய நண்பர் குலாம் காதிறு நாவலர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புடையவர்.
அசனாலெப்பைப் புலவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்க சில: ஆசிரிய விருத்தம் (முகையதீன் ஆண்டவர் மீது பாடியது), திருநாகை நிரோட்டக யமகவந்தாதி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 166)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kvpw6y5n/
தமிழ்“அசனாலெப்பைப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kvpw6y5n/APA
Oliyon Research. (2026). அசனாலெப்பைப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kvpw6y5n/MLA
"அசனாலெப்பைப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kvpw6y5n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment