இலங்கையில் வாழ்ந்த இசுலாமியத் தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தையார் பெயர் சுல்தான் முகையிதீன். காலம் கி.பி. 1870-1918. இவர் ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் சிறந்த புலமை பெற்றிருந்தார். இலங்கை அரசுத் துறையில் எழுத்தராகப் பணியாற்றிய முதல் இசுலாமியத் தமிழர் இவரே என்பர். இவரது நெருங்கிய நண்பர் குலாம் காதிறு நாவலர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புடையவர். அசனாலெப்பைப் புலவர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தக்க சில: ஆசிரிய விருத்தம் (முகையதீன் ஆண்டவர் மீது பாடியது), திருநாகை நிரோட்டக யமகவந்தாதி, நவரத்தினத் திருப்புகழ், குதுபு நாயக அனுசாசனம்.