எத்தியோப்பியாவில் உள்ள ஒரு தொழில் நகரம். எரிட்ரியா மாநிலத்தின் தலைநகரம். செங்கடலில் அமைந்துள்ள மிட்சிவா (Mitsiwa) என்னும் துறைமுக நகரிலிருந்து 105 கி.மீ. தொலைவில் உள்ளது. மிட்சிவாவுடன் இந்நகரம் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு அசுமாராப் பல்கலைக்கழகம் உள்ளது. மக்கள் தொகை 37,3,827 (1978).