சூரிய வழி நேரம்
cūriya vaḻi nēram
தோற்றச் சூரிய வழி நேரம் (apparent solar time), சராசரி சூரிய வழி நேரம் (mean solar time) என்னும் இரு பிரிவுகளையும் சூரிய வழி நேரம் (solar time) குறிக்கும்.
தோற்றச் சூரிய வழி நேரம் (apparent solar time), சராசரி சூரிய வழி நேரம் (mean solar time) என்னும் இரு பிரிவுகளையும் சூரிய வழி நேரம் (solar time) குறிக்கும்.
தோற்றச் சூரியன் ஓரிடத்தின் உச்சி வட்டத்தைக் (meridian) கடக்கும் போது, அடுத்தடுத்த இரண்டு மேலுச்சிக் கடத்தல் நேரங்களுக்கோ (two consecutive upper transits), கீழுச்சிக் கடத்தல் நேரங்களுக்கோ (lower transits) இடைப்பட்ட காலமே தோற்றச் சூரிய வழி நாள் (apparent solar day) எனப்படும். ஆனால், தோற்றச் சூரியன் தன் பாதையில் சீரான கோண வேகத்தில் இயங்காமையாலும், அதன் தோற்றப் பாதை (ecliptic) நடு வரைக்கு (equator) 23°5' சாய்வில் உள்ளமையாலும், வல ஏற்றம் (right ascension) சீரான வேகத்தில் மாறுவதில்லை. இதனால், சீராக இயங்கும் கடிகாரம் தோற்றச் சூரிய வழி நேரத்தைக் காட்டுவதில்லை. சூரியக் கடிகையிலிருந்தே (sun dial) இந்நேரம் குறிக்கப்படும். இது வானியல் ஆய்வுக்குப் பயன்படுமேயன்றி, அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை.
இச்சிக்கலைத் தீர்க்க, வான சராசரி சூரியன் (astronomical mean sum) என்னும் ஒரு கற்பனைச் சூரியனை அமைத்து, அதன் சீரான வல ஏற்ற அடிப்படையில், சராசரி சூரிய வழி நேரம் (mean solar time) என ஒரு நேரத்தை வானியலார் கண்டு பிடித்தனர். ஓராண்டில், இக்கற்பனைச் சூரியன் நடு வரையின் மேல் சீரான கோண வேகத்தில், வல ஏற்றம் சீராக இருக்குமாறு ஒரு முழுச் சுற்றுச் சுற்றுகிறது. வான சராசரி சூரியன் உச்சி வட்டத்தைக் கடக்கும் போது, உண்டாகும் இரண்டு அடுத்தடுத்த மேலுச்சிக் கடத்தல் நேரங்கள் அல்லது கீழுச்சிக் கடத்தல் நேரங்களுக்கு இடைப்பட்ட கால அளவே சராசரி சூரிய வழி நாள் (mean solar day) ஆகும். இது குறிப்பிட்ட கால அளவை உடையது. கீழுச்சிக் கடக்கும் நேரமாகிய இரலிலிருந்து 0–24 மணியாக நாள் பிரிக்கப் படுகிறது. இந்நேரமே கடிகாரங்களில் குறிக்கப் படுகிறது. தோற்றச் சூரிய வழி நேரத்திற்கும், சராசரி சூரிய வழி நேரத்திற்கும் உள்ள வேறுபாடு ±16' ஆகும். இது காலச் சமன்பாடு (equation of time) எனப்படும். —பங்கஜம் கணேசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 646)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kn276p8r/
தமிழ்“சூரிய வழி நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kn276p8r/APA
Oliyon Research. (2026). சூரிய வழி நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kn276p8r/MLA
"சூரிய வழி நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kn276p8r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment