சிசி

cici
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்மை நகல் என்று பொருள்படும் Carbon Сору அல்லது Courtesу Сору என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்ப, மின்னஞ்சல் மென்பொருளில் வழியுள்ளது. To என்பதில் அஞ்சல் பெறுபவரின் முகவரியைத் தரவேண்டும். CC என்பதில் வேறு ஒருவரின் அல்லது பலரின் முகவரியைத் தரலாம். அவர்களுக்கும் அஞ்சல் சென்று சேரும். CC-யில் தரப்பட்ட முகவரிதாரர்கள் அனைவரும் இந்த மடல் வேறு எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வகையில் bcc என்று குறிப்பிட்டு இன்னும் சிலருக்கு அதே மடலை அனுப்பிவைக்கும் முறையிலிருந்து மாறுபடுகிறது. bcc-யில் குறிப்பிடப்படும் முகவரி தாரர்களுக்கும் மடல் கிடைக்கும். ஆனால், இந்த மடல் எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிய முடியாது. (bcc-blind carbon Copy). — CC
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நகல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 225)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmuhc8rs/

தமிழ்
“சிசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmuhc8rs/
APA
Oliyon Research. (2026). சிசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmuhc8rs/
MLA
"சிசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmuhc8rs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment