இலெப்டிசு மக்னா
ilepṭicu makṉā
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இலிபியாவில் ஓம்சு என்னும் பகுதிக்கு அருகிலுள்ள தொன்மையான நகரம்.
வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இலிபியாவில் ஓம்சு என்னும் பகுதிக்கு அருகிலுள்ள தொன்மையான நகரம். இது இலெப்டிசு என்றும் கூறப்பட்டது. இந்நகரம் திரிபோலியிலிருந்து 100 கி.மீ. தென்கிழக்காக அமைந்துள்ளது. இக்காலத்தில் இது இலப்தா (Labdah) என்னு கூறப்பட்டுகிறது. இலெப்டிசு மக்னா (Leptis magna) பினீசியர்களின் காலத்திலும் உரோமானியர்களின் காலத்திலும் பெரும் புகழ்பெற்று விளங்கியது. பினீசியர்கள் கி.மு. 600–இல் இங்கு வாழ்ந்தனர். இது கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் நுமிடிய அரசின் (Numidian Kingdom) சிறந்த பகுதியாகத் திகழ்ந்தது. உரோமானியர்கள் கி.மு. 46–இல் இதனை ஆட்சிபுரித்தனர். மத்திய தரைக்கடல் பகுதியில் இந்நகரம் அமைந்துள்ளதால் அக்காலத்திலேயே இது சிறந்த வாணிகத் தலமாக விளங்கி வந்தது. உரோமானியர்கள் இங்குப் பல அழகு வாய்ந்த கட்டடங்களைக் கட்டினர். இந்நகரம் மணலினால் புதையுண்டு அழிந்தது. இப்புதையுண்ட நகரத்தில் 1920-இல் இத்தாலியத் தொல்லியல் அறிஞர்கள் அகழாய்வினை மேற்கொண்டனர் அதன் பின்னர்ப் பல்வேறு காலங்களில் மேலும் பல்வேறு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மணலில் புதையுண்ட பல சிறப்பான கட்டடங்கள் அகழாய்வினால் வெளிக் கொணரப்பட்டன. அரசக் குடும்பத்தினரின் நீராடும் மண்டபம் பேரரசர் ஆட்ரியன் காலத்தில் கட்டப்பட்டது. பேரரசர் செப்டிமியசு செவிரசு (Septimius Severus) இந்நகரத்தில் பிறந்தார். தாம் பிறந்த ஊரில் அழகு வாய்ந்த பல கட்டடங்களை அவர் கட்டினார். அவற்றில் அவர் கட்டிய துறைமுகம் சிறப்பு வாய்ந்தது. மேலும், அரைவட்ட அரங்கமும் நீண்ட சதுரமான தூண் மண்டபம் இணைந்த ஒரு கட்டிடமும், இருபக்கமும் தூண்கள் வரிசையாக அமைத்து அமைக்கப்பட்ட சாலையும், சிற்பங்கள் உள்ள வெற்றிவிழா வளைவும் இவர் காலத்தைச் சார்ந்தவை. இந்நகரம் கி.பி. 300-ஆம் ஆண்டு திரிபோலிடானியா (Tripolitania) வின் தலைநகரமாக விளங்கியது. நாடோடிக் கூட்டத்தினர் இந்நகரை கி.பி. 365–இல் சூறையாடினர். பலமுறை இந்நகரம் மணலால் அழிவுற்றது. மணல் மூடிய நகரத்தின்மீது பைசாண்டியப் பேரரசின் போது (Byzantine Empire) மீண்டும் பல திருச்சபைகளும் சுவர்களும் கட்டப்பட்டன.
இலெப்டிசு மக்னா குளியல் அறை
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 438)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmtdgjda/
தமிழ்“இலெப்டிசு மக்னா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kmtdgjda/APA
Oliyon Research. (2026). இலெப்டிசு மக்னா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmtdgjda/MLA
"இலெப்டிசு மக்னா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kmtdgjda/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment