தோராயக் கொள்கை (approximation theory), காசியன் பரப்பு காண் முறை (Gaussian quadrature), வரம்பு மதிப்புக் கணக்குகள் (boundary value problems), தொகையீட்டுச் சமன்பாடுகள் (integral equations) போன்ற கணிதப் பாடங்களில் செங்கோணச் சார்புகள் (orthogonal function) இடம் பெறுகின்றன. \int_a^b fₘ (x) fₙ(x) .dx = 0 எனில், fₘ(x), fₙ(x) என்னும் சார்புகள் (a,b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகள் ஆகும். பொதுவாக, \int_a^b ω (x) fₘ (x) fₙ(x) dx = 0 எனில், fₘ(x), fₙ(x) என்னும் சார்புகள் ω(x) என்னும் மிகை மதிப்புள்ள எடைச் சார்பைப் (weight function) பொறுத்து (a,b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகள் ஆகும். இறுதியாக, சார்புகளின் கணத்தில் (set) உள்ள எந்த இரு வெவ்வேறு சார்புகளும் (a,b) என்னும் இடைவெளி- யில் செங்கோணச் சார்புகள். எனில் இக்கணக் (a, b) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகளின் கணம் எனப்படும், எடுத்துக்காட்டாக, கணம் (0,1) என்னும் இடைவெளியில் செங்கோணச் சார்புகளின் கணம் ஆகும், மேற்காண்பவை இன்றியமையாத செங்கோணப் பல்லுறுப்புக் கோவைகள் (orthogonal polynomials) ஆகும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —சி. சௌ. கருப்பன்செட்டி