பண்டைய இந்திய அரசுப்பகுதிகளுள் ஒன்று. இங்குப் புத்தரின் எச்சங்களைக் கொண்டு நிலைநாட்டப் பெற்ற தூபி ஒன்று கட்டப்பெற்றிருந்தது. தம்மபதம் பற்றிய விளக்கவுரையில் அலகப்பா (Allakappa) என்ற பகுதியின் பெயர் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளது.