அண்டிரன்
aṇṭiraṉ
இவனுக்கு ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் பெயர் வழங்கும்.
இவனுக்கு ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் பெயர் வழங்கும். வேளாளன். ஊர் பொதிகைக்கு அருகிலுள்ள ஆய்குடி. கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பாம்பு நல்கிய நீல ஆடையை ஆலின்கீழிருந்த சிவபெருமானுக்குச் சாத்தியவன் (சிறுபா: 96-99). யானைகளைப் பரிசில்களாகக் கொடுத்தவன். கொங்குநாட்டாரை மேற்கடற் பக்கத்தே ஓட்டியவன். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார் என்போர். இவருள் முடமோசியாரே இவ்வள்ளலின் பெருமைகளை மிகுதியாகப் பாடியுள்ளார். (புறம். 127-136, 240-41, 374-75, நற். 167).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 87)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kedcp6ym/
தமிழ்“அண்டிரன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kedcp6ym/APA
Oliyon Research. (2026). அண்டிரன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kedcp6ym/MLA
"அண்டிரன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kedcp6ym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment