{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kedcp6ym", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kedcp6ym/", "kind": "article", "headword": "அண்டிரன்", "romanization": "aṇṭiraṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:18.668937+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இவனுக்கு ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் பெயர் வழங்கும்.", "body_ta": "இவனுக்கு ஆய் எனவும் ஆய் அண்டிரன் எனவும் பெயர் வழங்கும். வேளாளன். ஊர் பொதிகைக்கு அருகிலுள்ள ஆய்குடி. கடையெழு வள்ளல்களுள் ஒருவன். பாம்பு நல்கிய நீல ஆடையை ஆலின்கீழிருந்த சிவபெருமானுக்குச் சாத்தியவன் (சிறுபா: 96-99). யானைகளைப் பரிசில்களாகக் கொடுத்தவன். கொங்குநாட்டாரை மேற்கடற் பக்கத்தே ஓட்டியவன். இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச் சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார், குட்டுவன் கீரனார் என்போர். இவருள் முடமோசியாரே இவ்வள்ளலின் பெருமைகளை மிகுதியாகப் பாடியுள்ளார். (புறம். 127-136, 240-41, 374-75, நற். 167)."}}