கந்தரத்தாதி

kantarattāti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்நூல் வில்லிபுத்தூர் ஆழ்வாருக்கும், அருணகிரிநாதருக்கும் கல்வி சம்பந்தமான வாதம் நடந்தபோது அருணகிரிநாதரால் பாடப்பட்டநூல் என்பர். இதில் உளள பாடல்கள் மடக்கு என்னும் அணியால் அமைந்தவை. இவற்றிற்கு வில்லிபுத்தூரார் உரை கூறிக்கொண்டு வந்தும் 'திதத்தத்த’ என்று தொடங்கும் திருப்பாடற்குப் பொருள் கூற இயலாது விழித்தனர் என்பர். இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. இதில் 100 பாடல்கள் உள்ளன. இந்நூலுக்குரிய உரை வில்லிபுத்துாராருடையது என்பது ஆன்றோர் துணிபு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 472)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k9fzhftm/

தமிழ்
“கந்தரத்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k9fzhftm/
APA
Oliyon Research. (2026). கந்தரத்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k9fzhftm/
MLA
"கந்தரத்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k9fzhftm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment