படிக மற்றும் ஈந்தணைவிப் புலங்கள்
paṭika maṟṟum īntaṇaivip pulaṅkaḷ
படிகத்தின் உள்ளே அமையும் உலோக அயனி ஈந்தணைவி அயனிகள் பிணைப்பு, தூண்மையான நிலையின் ஈர்ப்பினால் மட்டுமே நடைபெறும் எனக் கருதுவது படிகப் புலக் கொள்கையாகும்.
படிகத்தின் உள்ளே அமையும் உலோக அயனி ஈந்தணைவி அயனிகள் பிணைப்பு, தூண்மையான நிலையின் ஈர்ப்பினால் மட்டுமே நடைபெறும் எனக் கருதுவது படிகப் புலக் கொள்கையாகும். இது நிலையின் ஈர்ப்புப் பிணைப்பும், சக பிணைப்பும் கலந்த பிணைப்பு என்பது படிக ஈந்தணைவி புலக் கொள்கை (Crystal–ligand field theory) ஆகும்.
படிக அமைப்பினுள் இராத தனி உலோக அயனி ஒன்று எந்த உலோகங்களிலும் ஆட்படாது அமைக்கப் படலாம். எதிர் மின் துகள்களின் அமைப்பினால், இந்த அயனியின் சில ஆற்றல் நிலைகள் சீரழிந்த சம ஆற்றல் நிலைகளாக இருக்கின்றன. இந்த அயனி, படிக அமைப்பு ஒன்றிலும் செலுத்தப் படும். இதனால், உலோக அயனியைச் சூழ்ந்துள்ள பிற அயனிகள், அதன் மீது மின் புலன்களை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக ஏற்படும், தொகு மின் புலம் உலோக அயனியை அணைவுக்கு உள்ளாக்குகிறது. இதனால், உலோக அயனியின் சீரழிந்த சம ஆற்றல் நிலைகள், இரண்டு அல்லது மேற்பட்ட வெவ்வேறு ஆற்றல் நிலைகளாகக் கூறு படுத்தப் பட்ட ஆற்றல் நிலைகளுக்கிடையேயான ஆற்றல் வேறுபாட்டினைக் கணக்கிட, உலோக அயனி மீது லிகான்ட் அயனிகள் செயல் பட்டுத் தோன்றும் உலைவு தூண்மையான நிலையின் ஈர்ப்பினால் மட்டுமே ஏற்படுகிறது எனக் கொள்ளலாம்.
எடுத்துக் காட்டாக, T_i Cl_6^{3-} அயனியில் Tiஉலோக அயனி மீது Cl லிகாண்ட் அயனிகள் செலுத்தும் நிலை மின் புலம், எண் முக வடிவச் சோடியம் குளோரைடு (NaCl) படிக அமைப்பின் சோடியம் அயனி மீது, அதனைச் சூழ்ந்துள்ள ஆறு குளோரின் அயனிகள் ஏற்படுத்தும் நிலை மின் புலத்தை ஒத்துள்ளது எனக் கொள்ளலாம். தனி Ti^{3+}(III) அயனி ஒரு 3d நிலையிலுள்ள எதிர் மின் துகளைப் பெற்றுள்ளது. 3d நிலை என்பது, அணுவின் எதிர் மின் துகளின் மூன்றாம் சுற்று வட்டப் பாதையின் மூன்றாம் கூட்டின் ஆற்றல் நிலையைக் குறிக்கும். இதன் எதிர் மின் துகள் பகிர்வு, கோளச் சமச் சீர்மை உடையதாக இருக்கும். இதனுடன், குளோரின் அயனிகள் ஒட்டும் போது, அச்சமச் சீர்மை குலைந்து, Ti அயனியின் சீரழிந்த சம ஆற்றல் நிலகைள் பிளவு படும். இவ்வாறு பிளவுற்ற ஆற்றல் நிலைகளுக்கிடையே, ஆற்றல் வேறுபாட்டினைக் கணக்கிடலாம்.
படிகக் கட்டினுள் உள்ள ஓர் உலோக அயனி மீது, அதனைச் சூழ்ந்துள்ள அணைவு அயனிகள் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு, அவற்றிற்கிடையே செயல் படும் நிலை மின் புலம் மட்டுமே காரணமாகும் எனவும், இதனைக் கணக்கிட, அந்த அயனிகளைப் புள்ளி வடிவ மின் துகள்களாகக் கொள்ள வேண்டும் எனவும் கருதுவதே, படிகப் புலக் கொள்கையின் அடிப்படை வரையறைகள் ஆகும். ஆனால், படிகங்களில் உள்ள அயனிகளில் ஏற்படும் பிணைப்பு, அவற்றிற்கிடையேயான நிலை மின் ஈர்ப்பின் (electrostatic attraction) மூலம் மட்டுமே ஏற்படும் எனக் கொள்வது நிலைமையை முற்றிலுமாக விளங்குவதன்று. படிகத்தினுள் உலோக அயனிக்கும், அணைவு அயனிகளுக்கும் இடையே, நிலை மின் ஈர்ப்புப் பிணைப்புடன் படிகப் புலக் கொள்கையே படிக அணைவு புலக் கொள்கை எனப் படுகிறது. இவ்வாறான பிணைப்பை ஏற்படுத்தும் மின் புலங்கள் படிக லிகாண்ட் மின் புலங்கள் எனப் படுகின்றன. —கோ. மணிவண்ணன் துணை நூல். F. Albert Cotton, Chemical Application of Group Theory, Second Edition, Wileyester Ltd, New Delhi, 1971.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 493)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jrg8v9pw/
தமிழ்“படிக மற்றும் ஈந்தணைவிப் புலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jrg8v9pw/APA
Oliyon Research. (2026). படிக மற்றும் ஈந்தணைவிப் புலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jrg8v9pw/MLA
"படிக மற்றும் ஈந்தணைவிப் புலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jrg8v9pw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment