உயர் தரத் தொடு உருமாற்றத்தாலும், சில படிவுகளின் காற்றியக்கத்தாலும் (paeumatolysis) உரு- வாகும் ஒரு வகைப் பாறைகள் சானிடினைட் (sanidinite) எனப்படும். இப்படிவுகள் எரிமலைக் குழம்பு அல்லது எரிமலையால் வெளியேற்றப்பட்ட அர்ஜில்லைட்டுகள் நிறைந்தவையாகும். மேற்கு ஜெர்மனியில் லாச்சர் ஏரிப் பகுதியில் காணப்படும் சானிடினைட்டுகள் மிகுந்த புகழ் பெற்றவை. மூலப்பொருள்களில் அலுமினா—படலப் பாறை மிகுதியாகக் காணப்படுகிறது. மேலும் குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார், கயனைட், ஸ்டாரோலைட், கார்னட் முதலியவையும் காணப்படுகின்றன. சில இடங்களில் இப்பாறைகள் கண்ணாடியாக உருக்கப்படுகின்றன; சில இடங்களில் முழுதுமாக மீள்படிகமாக்கப்பட்டு ஹைபர்ஸ்தீன், கார்டியரைட், குருந்தம் மற்றும் பிற கனிமங்களாக உருவாகின்றன. காற்றியக்க முறையால் உட்செலுத்தப்படும் சோடா மற்றும் பிற வளிமங்கள், சோடியம் மிகுதியாக உள்ள பெரிய சானிடின் படிகங்களையும், குளோரைடுகள், சல்ஃபேட்டுகள், கார்போனேட்டுகள் முதலியவற்றையுடைய கங்கிரினைட், நோஸ்லைட், ஸ்கபோலைட், அபடைட், கால்சைட் போன்ற கனிமங்களையும் உருவாக்குகின்றன. மேலும், பல எரிமலைகளிலிருந்து வெளியேற்றப்படும் பொருள்களிலிருந்து (எ-டு: வெசுவியஸ் எரிமலை) கனிம உட்கூறுகள் அறியப்படுகின்றன. —இரா, சரசவாணி <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க, இக்கோடு தேவை. ---->