அத்புதானந்த சுவாமி
atputāṉanta cuvāmi
இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர்.
இராமகிருட்டிண பரமகம்சரின் சீடர்களுள் ஒருவர். அவருடைய பிறந்த நாள் தெரியவில்லை. அவருடைய தொடக்கக் காலப் பெயர் இரக்துராம். பீகார் மாநிலத்தைச் சார்ந்த சாப்ரா என்னும் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் அவர் ஏழைப் பெற்றோர்களின் மகனாகப் பிறந்தார். அவருடைய பிள்ளைப் பருவத்தைப் பற்றிய விவரங்கள் கிடைத்தில. ஆசிரியர் போல் அவர் கருதப்படாவிடினும் தற்செயலாகக் கற்பித்த அவருடைய பாடங்கள் அவரைச் சந்திக்க வந்த மக்களிடத்தில் தீவிரமான பத்தியையும் அவரிடம் அன்பையும் ஏற்படுத்தின. அவருக்கு இலாது மகராசர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சுவாமி அத்புதானந்தர் 1920–ஆம் ஆண்டு ஏப்பிரல் 24–ஆம் நாள் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 327)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jkfw6up3/
தமிழ்“அத்புதானந்த சுவாமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jkfw6up3/APA
Oliyon Research. (2026). அத்புதானந்த சுவாமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jkfw6up3/MLA
"அத்புதானந்த சுவாமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jkfw6up3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment