சாயக் கம்பளித் துணி
cāyak kampaḷit tuṇi
பல்வேறு வழிமுறைகளில் சாயமேற்றப்பட்ட கம்பளித் துணியை இழை வடிவிலோ, நூல் வடிவிலோ, துணி வடிவிலோ சாயமேற்றுவதற்கு வழிமுறைகள் நன்கு வகுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வழிமுறைகளில் சாயமேற்றப்பட்ட கம்பளித் துணியை இழை வடிவிலோ, நூல் வடிவிலோ, துணி வடிவிலோ சாயமேற்றுவதற்கு வழிமுறைகள் நன்கு வகுக்கப்பட்டுள்ளன.
நூற்பதற்கு முன்பாகவே வெட்டிழைக்குச் சாயமேற்றும் முறை, இழைச் சாயமேற்றல் (stock dyeing) எனப்படும். இதில் இரு வகை உண்டு; சற்றே பழமையான முறையில் இழையைக் கட்டிலிருந்து பிரித்து, சிறு சிறு கட்டுகளாகப் பெரிய தொட்டிகளில் அடுக்கி, உயர் வெப்ப நிலையில் சாயத்தை ஊற்றிச் சுழற்ற வேண்டும். மற்றொரு முறையில் கட்டைப் பிரிக்காமல், நூல் கட்டு முழுதும் உறையை அகற்றாமல், கிழித்துச் சாயக் கரைசலை உள்ளே பாய்ச்சுவர். இம்முறையில் உழைப்பும், நேரமும் குறையும். மேற்றப்படாத இழையை விடச் சாயமேற்றப்பட்ட இழையை நூற்பது கடினமாகும். ஆக்ஸ்போர்டு சூட்டிங்குகள், டூவீட் (tweed) ஆகிய கம்பளித் துணிகள் இழைச் சாயமேற்றப்பட்டவை.
சாயமேற்றப்பட்ட மணிக் கம்பளி (top worsted). கம்பளியைச் சிக்கெடுத்துக் குட்டை இழைகளை அகற்றி, சுமார் 3 செ.மீ. தடிமனுக்குக் கயிறு வடிவில் முறுக்கித் தயாரிக்கப்படுவது மணிக் கம்பளி. துளையிடப்பட்ட உருளையின் மீது மணிக் கம்பளியைச் சுற்றிச் சாயக் கரைசலை ஊற்ற வேண்டும்.
அருவிச் சாயமேற்றல்(beck dyeing). எல்லாக் கம்பளி வகைகளுக்கும் ஏற்ற இம்முறையில் துணியை விறைப்பற்ற கயிறு வடிவில் சாயத் தொட்டியில் அமிழ்த்த வேண்டும். இக்கயிறு ஒரு தண்டவாளத்தில் நகர்ந்து ஒரு சுற்றும் அமைப்பை அடைகிறது. இங்கு கயிறு சாயத்தில் அமிழ்த்தப்பட்டு, மேல் எழுந்து முன்னேறும். இவ்வழிமுறை மீண்டும் மீண்டும் செயல்படுத்தப்பட்டுத் தேவைப்படும் அடர்த்திக்குச் சீராகச் சாயமேற்றப்படுகிறது. துணியின் மென்மையும், அடர்வும் சாயமேற்ற நிகழ்வால் பாதிக்கப்படுவதில்லை.
அறை வெப்பநிலைத் திணிப்பு முறை (coldpad-batch process). அறை வெப்பநிலையில் சாயத்தில் கம்பளித் துணியை நனைத்து, இரு அழுத்து உருளைகளுக்கிடையே செலுத்தினால், சாயம் துணிக்குள் திணிக்கப்பட்டு, மிகையான சாயம் பிழிந்து வெளியேற்றப்படும். துணிச் சுருளைச் சுற்றி உலராமல் தடுக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்கு உருளையை மெல்லச் சுழற்றிச் சாயம் படர்தலைச் சீராக்க வேண்டும். சாயத்தில் சேர்க்கப்படும் பிற பொருள்களையும், ஊன்றாத சாயத்தையும் அகற்றும் பொருட்டு வீரியம் குன்றிய ஒரு காரக் கரைசலில் கழுவி, துணியை உருவி எடுத்து உலர்த்த வேண்டும். —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Norma Hollen et. al., Textiles, Fifth Edition, Collier Macmillan Publishing Co., London, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 68)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jjshcbfy/
தமிழ்“சாயக் கம்பளித் துணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jjshcbfy/APA
Oliyon Research. (2026). சாயக் கம்பளித் துணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jjshcbfy/MLA
"சாயக் கம்பளித் துணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jjshcbfy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment