ரூதர்போர்டு கொள்கை

rūtarpōrṭu koḷkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இக்கொள்கை அணு பற்றியது. அனுவின் நுண்ணிய அமைப்பைக் கண்டறிந்த பெருமை இவரையே சாரும். இவர் கொள்கைப்படி ஒவ்வொரு அணுவிலும் ஒரு கருவுண்டு. அது நேர்மின்னேற்ற முடையது. எதிர்மின்னேற்றமுடைய துகள்கள் மையமாகச் சுற்றிவருகின்றன. அணுவின் கருவிலுள்ள முன்னணுக்களின் (புரோட்டோன்ஸ்) நேர்மின்னேற்றமும் அதைச் சுற்றிவரும் துகள்களின் மின்னணுக்களின் (எலக்ட்ரான்ஸ்) எதிர்மின்னேற்றமும் சமம். எனவே, ஓர் அணு நடுநிலை மின்னேற்றம் பெற்றுள்ளது. அணுவின் நிறை முழுவதும் கருவினாலேயே ஏற்படுகிறது. இவர் முன்னணுக்கள், மின்னணுக்கள் பற்றி விளக்கினார். ஆனால், மின்னணுக்கள் அனுவில் அமைந்த இடங்களையோ அமைந்துள்ள வகைபற்றியோ நுட்பமாக விளக்கவில்லை — Rutherford theory
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhhkwppr/

தமிழ்
“ரூதர்போர்டு கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhhkwppr/
APA
Oliyon Research. (2026). ரூதர்போர்டு கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jhhkwppr/
MLA
"ரூதர்போர்டு கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhhkwppr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment