இராமநாடகக் கீர்த்தனை
irāmanāṭakak kīrttaṉai
இராமநாடகக் கீர்த்தனை என்னும் விழுமிய இசைத்தமிழ் நூல், கி.பி.
இராமநாடகக் கீர்த்தனை என்னும் விழுமிய இசைத்தமிழ் நூல், கி.பி. 1712–ஆம் ஆண்டில் தில்லையாடியென்னும் சிற்றூரிற் பிறந்து, அம்பலவாணக் கவிராயர்பாற் கற்றுச் சீர்காழியிற் பல காலம் வாழ்ந்த. அருணாசலக் கவிராயரால் இயற்றப்பட்டதாகும். தம் அறுபதாம் வயதில் இந்நூலை இயற்றித் திருவரங்கத்திலே அரங்கேற்றினார் கவிராயர்.
சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தைச் சார்ந்த கோதண்டராமய்யர், வேங்கடராமய்யர் என்னும் இசையறிஞர் இருவரின் வேண்டுகோட்கிணங்க இந்நூலியற்றப்பட்டதாகும். கம்பராமாயணத்தைக் கீர்த்தனை வடிவிலியற்றிய முதற்பாவலர் கவிராயரேயாவர்.
சிற்றேரி அருணகிரி முதலியார், வேங்கட சுப்பராய பிள்ளை, வேங்கடாசலச் செட்டியார் ஆகிய வள்ளற் பெருமக்கள் இவரைப் புரந்த புலவலர்கள் என்பது நூலிலுள்ள பாராட்டுக் கீர்த்தனைகள் தரும் செய்தியாகும். புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை, தஞ்சை மன்னர் துளசேந்திரர், மணலி முத்துக்கிருட்டிண முதலியார் ஆகியோரும் பாளையத்தலைவர் சிலரும் கவிராயருக்குச் சிறப்புச் செய்துள்ளனர்.
கம்பரின் கருத்துகளையும் தொடர்களையும் சொற்களையும் அடியொற்றிப் பாடப்பட்ட இந்நூல் கம்பராமாயணம் போலவே பாயிரமும் ஆறுகாண்டங்களும் கொண்டு விளங்குகிறது.
சரணங்கள் மட்டும் கொண்ட தோடயம் என்னும் உறுப்பு ஒன்றும், கண்ணிகளாக அமையும் திபதைகள் அறுபதும், பல்லவி, அநுபல்லவி, சரணம் என்னும் அமைப்புடைய தருக்கள் என்னும் கீர்த்தனைகள் நூற்றுத்தொண்ணூற்றேழும் கொண்ட இந்நூலில் இருநூற்று அறுபத்தெட்டு விருத்தங்களும், ஆறு கொச்சகங்களும், இரண்டு வெண்பாக்களும் ஒரு கலித்துறையும் ஓர் உரை நடையும் அடங்கியுள்ளன.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பத்தைந்து இராகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் சாவேரி, மோகனம், மத்தியமாவதி, அசாவேரி, ஆனந்த பைரவி, தோடி ஆகியவை மிகுதியாக ஆளப்பட்டுள்ளன.
இதில் அமைந்த தாளங்கள் எட்டாகும். ஆதி தாளமும், அடதாளசாப்பும் மிகுதியாக ஆளப்பட்டுள்ளன.
நாடகப் பாங்குடைய, இன்றியமையாத கம்பராமாயணக் கதைப் பகுதிகட்கு மட்டுமே இசைப் பாட்டு வடிவம் தந்துள்ளார் கவிஞர். வருணனைப் பகுதிகளாக அமையும் படலங்களை விலக்கியுள்ளார். ஏனைய கதைப் பகுதிகளைக் கீர்த்தனை ஒவ்வொன்றிற்கும் முன்புள்ள விருத்தத்திலேயே தொகுத்துக் கூறியுள்ளார். இவ்விருத்தங்களே, அடுத்தடுத்து வரும் கீர்த்தனைகளில் இடம்பெறும் கதை நிகழ்ச்சிகளை உறவுபடுத்திக் கதையில் இடையறவின்றித் தடுக்க உதவுகின்றன.
கம்பர் போற்றிய மொழித் தூய்மையை இந்நூலில் காணமுடியவில்லை. வடசொற்களும் பேச்சு வழக்குச் சொற்களும் தடையின்றி ஆளப்பட்டுள்ளன. இராகத்திற்கும் தாளத்திற்கும் முதன்மை தந்து இயற்றப்பட்டதாதலின், தமிழ் மயக்க விதிகட்குப் புறம்பான சொல்லாட்சியினையும் காணமுடிகிறது.
எண்ணற்ற அழகிய உவமைகளையும், பொருள் செறிந்த பழமொழிகளையும் ஆசிரியர் இடமறிந்து ஆண்டிருப்பது இந்நூற்குச் சிறப்பளிக்கிறது.
இந்நூலின் கீர்த்தனைகள், அவை தோன்றிய காலத்திலேயே தமிழ் மக்களாற் போற்றப்பட்டன. இன்றும் அவை பாடப்படுகின்றன. சில கீர்த்தனைகள் நூலிற் குறிப்பிட்ட இராகத்தினும் வேறான இராகத்திலும் பாடப்படுகின்றன. தமிழிசை வரலாற்றில் இந்நூலுக்குத் தனியான இடமுண்டு. அ.த.
இராமநாதக் கவிராயர்,
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் குறிச்சி என வழங்கப்பெறும் பண்ணை மாநகரினர். கவிதை படைக்கும் ஆற்றலால் இவர் கவிராயர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் ‘சிவ சைலப்பள்ளு’ என்னும் சிற்றிலக்கியத்தினைப் படைத்துள்ளார். முக்கூடற்பள்ளு, வையாபுரிப்பள்ளு முதலிய பள்ளு என்னும் நாட்டுப்புறச் சிற்றிலக்கிய வகையில் அமைந்துள்ள இந்நூல், அந்த மரபில் தோன்றிய மக்களின் வழக்காற்றுச் சொற்களையும், பழக்க வழக்கங்களையும் அமைத்துப் பாடப்பட்டது. இவர் தம் காலத்தில் வாழ்ந்த ஆறை அழகப்ப முதலியார், சிவசைலம் திருக்கோயிலுக்குச் செய்துள்ள திருப்பணிகள், சிறப்பொடு பூசனை நிகழ்வதற்கு அமைத்துள்ள கட்டளைகள் போன்றவற்றை இப்பள்ளு நூலில் பலவாறாகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஆறை அழகப்ப முதலியார் இவர் காலத்திலிருந்த நாயக்கர் படையில் தளபதியாக விளங்கியவர். இத்தளபதியும் கவிராயரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாவர் என்பதனை இப்பள்ளு நூலால் அறிய முடிகிறது. இந்நூலாசிரியர் அழகப்ப முதலியாரால் ஆதரிக்கப்பட்டு வந்துள்ளார். சிவசைலப்பள்ளு, ஆறை அழகப்ப முதலியார் மரபில் வந்த சிவசைல முதலியாரால் 1918–ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இராமநாதபுர மாவட்டம்
காண்க: தமிழ் நாட்டு ஆட்சிப் பிரிவுகள்.
இராமநாதம் பிள்ளை, அ. (கி.பி. 1895–1960)
இவர் கி.பி. 1895 ஏப்பிரல் 6–ஆம் நாள் சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள விளாகம் என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தையார் அம்பலவாண பிள்ளை; தாயார் அம்மணி அம்மாள். தொடக்கக் கல்வியைச் சிதம்பரத்தில் முடித்தபின் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate Course) சேர்ந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் விலங்கியல் துறையில் பி.ஏ. ஆனர்சு பட்டம் பெற்றார். பின்னர்ச் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் சேர்ந்து பயிற்சிப் பட்டமும் பெற்றார். கல்வி முடிந்ததும் பள்ளித் துணை ஆய்வாளராக நியமனம் பெற்றார். சிறிது காலத்துக்குப் பின் அனந்தப்பூர் அரசினர் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் விலங்கியல் துறையில் கூடுதல் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அப்போது பல்கலைக்கழக மாணவர் படைப் பயிற்சிப் பிரிவுக்குத் (U.T.C.) தலைவராகிப் (Captain) பல அதிகாரிகளுக்குப் பயிற்சி தந்தார்.
இராமநாதம் பிள்ளை, அ.
பின்னர் 1942–இல் மங்களூரிலும் 1943–51 ஆண்டுகளில் கோவையிலும் அரசு கலைக் கல்லூரிகளின்
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 122)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jd44n8dw/
தமிழ்“இராமநாடகக் கீர்த்தனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jd44n8dw/APA
Oliyon Research. (2026). இராமநாடகக் கீர்த்தனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jd44n8dw/MLA
"இராமநாடகக் கீர்த்தனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jd44n8dw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment