முதலாம் இராசராச சோழனின் (கி.பி 985–1014) ஆட்சிக்காலத்தில் வழக்கில் இருந்த நாடகங்களுள் இராசராச விசயம் தலைமை சான்றது. இச்சோழ வேந்தனின் அவைக் களப் புலவரான சுவர்ணன் நாராயண பட்டாதித்தன் என்பான் இந்நாடகத்தை வடமொழியில் இயற்றினான். வடமொழிப் புலவனான இவன் இராசராச சோழனின் இளமைக்காலம், வீரவரலாறு ஆகியவற்றை இந்நாடகத்தில் குறிப்பிட்டுள்ளான். இந்நாடகம் திருவிழாக்காலங்களில் நடிக்கப்பட்டது இந்நாடக நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.