தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள துறைமுகப் பட்டினம். இங்கு முசுலிம்கள் மிகுதியாக வாழ்கின்றனர். இவ்வூர் அதிவீரராம பாண்டியனுடைய பெயரைக் கொண்டது என்பார். இங்கிருந்து இலங்கைக்குத் தேங்காய், அரிசி போன்ற பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இங்கு உப்பளங்களும் உள்ளன. இவ்- வூரில் சிவன் கோயிலும் புகைவண்டி நிலையமும் உள்ளன. இங்கு ஒரு கல்லூரியும் உள்ளது.