தேவாரப் பாடல் பெற்ற மலைநாட்டுத் திருத்தலமாகும். கேரள மாநிலத்தில் கொடுங்களூருக்கு அருகில் உள்ள இத்தலம் சுந்தரரால் பாடப் பெற்றது. சென்னை – கொச்சி இருப்புப் பாதைவிலுள்ள இரிஞாலக்குடா நிலையத்திலிறங்கி 4 கல் தொலைவு கடந்து இவ்வூரை அடையலாம். இங்கிருந்து சுந்தரர் வெள்ளை யானை மீதும், அவர் தோழர் சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதும் ஏறிக் கைலாயத்துக்குப் புறப்- பட்டுச் சென்றனர் என்பது நூற்செய்தியாகும். இறைவன் – அஞ்சைக் களத்தீசர்; இறைவி – உமையம்மை, ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் இத்தலத்தில் தோன்றினார். ரா.கி.