{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/j83qejkk/", "data": {"id": "j83qejkk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j83qejkk/", "kind": "article", "headword": "அஞ்சைக்களம்", "romanization": "añcaikkaḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.390768+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தேவாரப் பாடல் பெற்ற மலைநாட்டுத் திருத்தலமாகும்.", "body_ta": "தேவாரப் பாடல் பெற்ற மலைநாட்டுத் திருத்தலமாகும். கேரள மாநிலத்தில் கொடுங்களூருக்கு அருகில் உள்ள இத்தலம் சுந்தரரால் பாடப் பெற்றது. சென்னை – கொச்சி இருப்புப் பாதைவிலுள்ள இரிஞாலக்குடா நிலையத்திலிறங்கி 4 கல் தொலைவு கடந்து இவ்வூரை அடையலாம். இங்கிருந்து சுந்தரர் வெள்ளை யானை மீதும், அவர் தோழர் சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதும் ஏறிக் கைலாயத்துக்குப் புறப்- பட்டுச் சென்றனர் என்பது நூற்செய்தியாகும். இறைவன் – அஞ்சைக் களத்தீசர்; இறைவி – உமையம்மை, ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் இத்தலத்தில் தோன்றினார். ரா.கி."}}