அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தத்துவ அறிஞராகவும் சமூகச் சீர்திருத்தக்காரராகவும் சமூகப்பணியின் முன்னோடியாகவும் விளங்கியவர்களுள் ஒருவராவார். எளிய குடும்- பத்தில் பிறந்த இவர் ஒகையோவிலிருந்த (Ohio) ஒரு குடியானவரிடம் பணி செய்து வந்தார். அக்குடியானவர் இலிண்டுமன் (Lindmann) கல்வி கற்பதற்கு ஊக்கமளித்தார். இவர் தம்முடைய சொந்த முயற்சியால் கல்லூரிப் படிப்புக்குத் தகுதியானவரானார். பின்னர், மிக்சிகன் வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றார். பிறகு மிக்சிகன் வேளாண்மைக் கல்லூரியின் விரிவாக்கத் திட்டத்தின் இயக்குநராகவும், சிகாகோவிலுள்ள சியார்சு வில்லியம் கல்லூரியில் ஊரகச் சமூகவியல் பயிற்சியாளராகவும், 1920–ஆம் ஆண்டில் வட கரோலினாப் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். இவர் கால இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார்; கல்லூரிகளில் பல சொற்பொழிவுகளும் ஆற்றினார். மேரி பார்க்கர் போலெத்து (Mary Parker Follett) என்பவருடன் இவருக்குக் கிடைத்த தொடர்பு காரணமாகச் ‘சமூகக் கண்டுபிடிப்பு; செயல் முறைக் குழுக்களை ஆய்வு செய்யும் முறை’ என்ற நூலை எழுதினார். இவர் 1924–இல் நியூயார்க்குச் சமூகப் பணிக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்து தம் ஓய்வுக்காலம் வரை அங்குப் பணியாற்றினார். தம் ஓய்வுக் காலத்திற்குப் பிறகு பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் சமூக ஆய்வுக்கூடங்களிலும் இவர் விரிவுரையாற்றினார். இவர் முதியோர் கல்வி, முன்னேற்றக் கல்வி, வீட்டு வசதி, குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவதை ஒழித்தல், சிறுபான்மையோரின் உரிமைகளைப் பாடுபட்டார். பாதுகாத்தல் ஆகிய பலவற்றிற்குப் சமூகப்பணித் தத்துவம், சமூகக் கல்வி, சொத்தும் பண்பாடும் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.