ஆவொசெட்
āvoceṭ
நீண்ட காலுள்ளதும் ஆழமில்லாத நீரில் நடந்துசெல்வதுமான பறவை.
நீண்ட காலுள்ளதும் ஆழமில்லாத நீரில் நடந்துசெல்வதுமான பறவை. உடல் வெண்மையாகவும் சிறகு கறுப்பாகவும் இருக்கும். தலையிலும் கழுத்திலும் பழுப்புக்கோடு விழுந்திருக்கும். அலகு சப்பையாக, மெல்லியதாக நீண்டு மேலுக்கு வளைந்திருக்கும். ஆழமில்லாத சேற்றில் இந்த அலகினாலே கிளறிக்கிளறி அங்குள்ள புழு முதலிய பிராணிகளைத் தின்னும். நீரில் மிதக்கும் பொருள்களையும் தின்னும். கேடு விளைவிக்கும் பூச்சிகளையும் தின்பதால் இது மனிதனுக்கு உதவி செய்வது. கோடைக் காலத்தில் இது வடக்கே பிரயாணம் செய்யும். இதன் உணவில் பூச்சி 40, மற்றப் பிராணி 25, விதை, இலை முதலியன 35 சதவீதமாக இருக்கின்றன. உள்ளான், ஸ்டில்ட்டு முதலியவை இதற்குச் சொந்தம். சாதி : ரிகர்விராஸ்ட்ரா.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 501)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hzyntduh/
தமிழ்“ஆவொசெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzyntduh/APA
Oliyon Research. (2026). ஆவொசெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hzyntduh/MLA
"ஆவொசெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hzyntduh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment