ஆன்ம அவத்தை

āṉma avattai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆன்மா அவத்தைக்கு உட்படுவது. அவ்வவத்தை இருவகை காரண அவத்தை - இது மூல அவத்தை அல்லது முத்திற அவத்தை. இதிலுள்ள மூன்று நிலைகள் 1. கேவல அவத்தை: ஆன்மா சர்வ சங்காரத்தில் சுத்த மாயா கரணத்தில் ஒடுங்கிப் படைப்புக்காலம் அளவும் ஆணவ மலத்தால் மறைப்புண்டு கிடக்கும். இப்பொழுது கலையாதி தத்துவங்களுடன் கூடாமல், அறிவும் செயலும் இழந்து ஆன்மா நிற்கும் நிலை இது. 2. சகல அவத்தை: படைப்பு தொடங்கிச் சர்வ சங்கார கால அளவும் ஆன்மா 36 தத்துவங்களுடன் கூடி, 84 இலட்சம் உயிர் இனங்களில் பிறந்து இறந்து உழலும் நிலை இது. 3. சுத்த அவத்தை: அவ்வாறு பிறந்து இறந்து உழலும் நிலையில் இருவினையொப்பு, மல பரிபாகம், சத்திநிபாதம் ஆகிய முந்நிகழ்ச்சிகளை அடைந்து ஆன்மா திருவருளுடன் கூடி இருக்கும் நிலை இது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 51)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hp2sz25v/

தமிழ்
“ஆன்ம அவத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hp2sz25v/
APA
Oliyon Research. (2026). ஆன்ம அவத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hp2sz25v/
MLA
"ஆன்ம அவத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hp2sz25v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment