தேவாரம்

tēvāram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீட்டில் வைத்துப் பூசிக்கத்தக்கது, அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய சைவசமய ஆசிரியர்கள் பாடியதோத்திர நூல், தேவனுக்குரிய பாமாலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 234)
2.
இது சைவ சமயத்தில் தலை சிறந்து விளங்கும் தோத்திர நூல்களில் முதன்மை வாய்ந்தது. தே+ஆரம் என்று இத்தொடர் பிரிக்கப்பட்டு, தேவனாகிய சிவபெருமானுக்கு உகந்த பாமாலை என்ற பொருளுடையது. இதனைப் பாடியவர்கள். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆவார். இது சைவத் திருமுறைகள் 12 இல் முதல் ஏழு . திருமுறைகளாக விளங்குவது. இது ஒரே காலத்தில் பாடப் பெறாமல், பல்வேறு காலங்களில் எழுந்தமையின் காலம் ஈண்டுக் குறிப்பிடப்படவில்லை. தேவாரம் என்பது வீட்டில் வைத்துப் பூசிக்கத் தக்கது என வைணவப் பேருரை ஆசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டு எழுதியிருப்பது உற்றுக் கவனித்தற்குரியது. இந்நூலால் அறுபத்து நான்கு கலைகளின் குறிப்புக்களையும், பல சித்திரக் கவிகளையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், இலக்கிய நயங்களையும், சித்தாந்த கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 519)
3.
முதல் ஏழு திருமுறைகள் முதல் மூன்று திருஞான சம்பந்தராலும், 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசராலும் 7ஆம் திருமுறை சுந்தரராலும் அருளப்பெற்றவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 169)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hksakefe/

தமிழ்
“தேவாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hksakefe/
APA
Oliyon Research. (2026). தேவாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hksakefe/
MLA
"தேவாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hksakefe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment