{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hksakefe/", "data": {"id": "hksakefe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hksakefe/", "kind": "word", "headword": "தேவாரம்", "romanization": "tēvāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:51:39.639824+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வீட்டில் வைத்துப் பூசிக்கத்தக்கது, அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய சைவசமய ஆசிரியர்கள் பாடியதோத்திர நூல், தேவனுக்குரிய பாமாலை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 234"}, {"n": 2, "definition_ta": "இது சைவ சமயத்தில் தலை சிறந்து விளங்கும் தோத்திர நூல்களில் முதன்மை வாய்ந்தது. தே+ஆரம் என்று இத்தொடர் பிரிக்கப்பட்டு, தேவனாகிய சிவபெருமானுக்கு உகந்த பாமாலை என்ற பொருளுடையது. இதனைப் பாடியவர்கள். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆவார். இது சைவத் திருமுறைகள் 12 இல் முதல் ஏழு . திருமுறைகளாக விளங்குவது. இது ஒரே காலத்தில் பாடப் பெறாமல், பல்வேறு காலங்களில் எழுந்தமையின் காலம் ஈண்டுக் குறிப்பிடப்படவில்லை. தேவாரம் என்பது வீட்டில் வைத்துப் பூசிக்கத் தக்கது என வைணவப் பேருரை ஆசிரியர்கள் தம் உரையில் குறிப்பிட்டு எழுதியிருப்பது உற்றுக் கவனித்தற்குரியது. இந்நூலால் அறுபத்து நான்கு கலைகளின் குறிப்புக்களையும், பல சித்திரக் கவிகளையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், இலக்கிய நயங்களையும், சித்தாந்த கருத்துக்களையும் தெரிந்து கொள்ளலாம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 519"}, {"n": 3, "definition_ta": "முதல் ஏழு திருமுறைகள் முதல் மூன்று திருஞான சம்பந்தராலும், 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசராலும் 7ஆம் திருமுறை சுந்தரராலும் அருளப்பெற்றவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 169"}]}}