கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புலவர். அத்துவிதக் கொள்கையில் இவர் பெற்றிருந்த புலமைச் சிறப்பால் ‘அத்வைத சித்தாந்தி’ என்னும் சிறப்புப் பெயரே இயற்பெயர் போல வழங்கலாயிற்று; ‘வேதாந்த சங்கை நிவாரணம்’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் மெய்ப்பொருள் நாட்டமுடையவர்களுக்குப் பயன்படத்தக்கது. செய்யுளால் ஆகிய இந்நூல் அத்துவிதக் கொள்கையை விளக்குவதாக உள்ளது.