உற்பத்தியில் வருவாய் வளைகோடுகள் சிறப்பிடம் பெறுகின்றன. நிறுவனத்தின் சமநிலையை வரையறுக்க உற்பத்தியாளன் வருவாய் செலவு வளைகோடுகளை நன்கு அறிந்திருந்த வேண்டும். ஒரு தொழில் நிறுவனம் தன்னுடைய உற்பத்திப் பொருள்களை அங்காடியில் விற்றுப் பெறக்கூடிய பணமே அதன் வருவாய் எனப்படும். வருவாயை இறுதிநிலை வருவாய் (Marginal Revenue) மொத்த வருவாய், சராசரி வருவாய் என மூவகைப்படுத்தலாம். இறுதிநிலை வருவாய் என்பது கூடுதலாக விற்கின்ற பொருளிலிருந்து பெறுகின்ற கூடுதலான வருவாயாகும். அதாவது ஓர் அலகை விற்பதனால் மொத்த வருவாயில் ஏற்படும் கூடுதலாகும். ஒரு நிறுவனம் 10 அலகு பொருள்களை விற்று உரூபாய் 500 மொத்த வருவாய் பெறுகிறது. அந்நிறுவனம் விற்பனையை 1 அலகு அதிகரித்து 11 அலகுகளை விற்று உருபாய் 540 வருவாய் பெற்றால், மொத்த வருவாயில் ஏற்பட்ட அதிகப்படியான உரூபாய் 40 இறுதிநிலை வருவாய் ஆகும். இறுதிநிலை வருவாய் = மொத்த வருவாய்–(மொத்த வருவாய்– 1 அலகு) :MR = TR–TR (n என்பது அலகுகள்) மேற்கண்ட அட்டவணையின் மூலம் ஒரு நிறுவனம் அதிக அலகு பொருள்களை விற்றால், அதன் மொத்த வருவாய் ஒவ்வோர் அலகுக்கும் மிகுகின்றது. உற்பத்தி அலகுகளின் விற்பனை மிகுதியாக மிகுதியாகச் சராசரி வருவாயும் இறுதிநிலை வருவாயும் குறைகின்றன. சராசரி வருவாயும் இறுதிநிலை வருவாயும் குறையும்போது இறுதிநிலை வருவாய் சராசரி வருவாயைவிட வேகமாகக் குறைகிறது. சராசரி வருவாய்க்கும் இறுதிநிலை வருவாய்க்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வரைபடம் 1, 2 சராசரி, இறுதிநிலை வருவாய் வளைகோடுகளின் உறவுகளை விளக்குகின்றன. உற்பத்தி பெருகினால் சராசரி வருவாயும், இறுதிநிலை வருவாயும் குறையும்; இறுதிநிலை வருவாய் சராசரி வருவாயை விட வேகமாகக் குறையும். சராசரி வருவாய் (AR) நேர்கோடாக அமைந்தால் இறுதிநிலை வருவாயும் (MR) நேர்கோடாக அமையும். சராசரி வருவாய்க் கோடு கீழ் நோக்கிச் சரிந்தால் இறுதிநிலை வருவாய்க் கோடும் சராசரி வருவாய்க் கோட்டுக்குக் கீழ்ச் சரிந்து செல்லும். சராசரி வருவாய் நேர்கோடாக இருந்தாலோ கீழ் நோக்கிச் சரிந்தாலோ இறுதிநிலை வருவாய்க் கோடு ஒய் (Y) அச்சிலிருந்து செங்குத்தாகச் செல்லும் சராசரி வருவாய்க் கோட்டைப் பாதியில் வெட்டும். இறுதிநிலைச் செலவும் இறுதிதியை வருவாயும் சீராக இருக்கும் நிலையில் தொழில் முயல்வோன் உயர்ந்த ஆதாயத்தைப் பெறுவதால், அவ்வெல்லையில் தன் உற்பத்தியின் அளவை வரையறுப்பான். எஸ்.பெ.