சார்பு அணு நிறை
cārpu aṇu niṟai
இயற்கையான நியூக்ளைடு கூட்டமைப்புக் கொண்ட ஓர் அணுவின் சராசரி நிறைக்கும், ஒரு கார்பன்-12 நியூக்ளைடு அணுவின் நிறையில் 12 இல் ஒரு பங்குக்கும் இடையிலான தகவு சார்பு அணு நிறை (realative mass unit) எனப்படுகிறது.
இயற்கையான நியூக்ளைடு கூட்டமைப்புக் கொண்ட ஓர் அணுவின் சராசரி நிறைக்கும், ஒரு கார்பன்-12 நியூக்ளைடு அணுவின் நிறையில் 12 இல் ஒரு பங்குக்கும் இடையிலான தகவு சார்பு அணு நிறை (realative mass unit) எனப்படுகிறது.
கார்பன்-12 இன் சார்பு அணு நிறை = 12
குளோரினின் சார்பு அணு நிறை = 35.453
அணுவிலுள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் எண்ணிக்கையையும், ஆற்றல் உள்ளடக்கத்தையும், அணுக் கருக் கட்டமைப்பையும் பொறுத்துப் பல அணுக்கள் நியூக்ளைடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆக்சிஜனின் அணு எடை 16 என வைத்துக் கொண்டு, தனிமங்களின் அணு எடையைக் கணக்கிடுவதில் உள்ள பல சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக 1960 இல் சார்பு அணு நிறை கருத்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
சார்பு அணு நிறை அலகு டால்ட்டன் (dalton) எனப்படும். அதைச் சுருக்கமாக (amu) என்பர். அதை u என்ற எழுந்தால் குறிக்கலாம். சார்பு நியூக்ளைடு நிறை எனவும் குறிக்கலாம். —கே.என்.ராமச்சந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 112)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hcc88hkq/
தமிழ்“சார்பு அணு நிறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hcc88hkq/APA
Oliyon Research. (2026). சார்பு அணு நிறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hcc88hkq/MLA
"சார்பு அணு நிறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hcc88hkq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment