{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hcc88hkq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hcc88hkq/", "kind": "article", "headword": "சார்பு அணு நிறை", "romanization": "cārpu aṇu niṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:53.157279+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இயற்கையான நியூக்ளைடு கூட்டமைப்புக் கொண்ட ஓர் அணுவின் சராசரி நிறைக்கும், ஒரு கார்பன்-12 நியூக்ளைடு அணுவின் நிறையில் 12 இல் ஒரு பங்குக்கும் இடையிலான தகவு சார்பு அணு நிறை (realative mass unit) எனப்படுகிறது.", "body_ta": "இயற்கையான நியூக்ளைடு கூட்டமைப்புக் கொண்ட ஓர் அணுவின் சராசரி நிறைக்கும், ஒரு கார்பன்-12 நியூக்ளைடு அணுவின் நிறையில் 12 இல் ஒரு பங்குக்கும் இடையிலான தகவு சார்பு அணு நிறை (realative mass unit) எனப்படுகிறது.\n\nகார்பன்-12 இன் சார்பு அணு நிறை = 12\n\nகுளோரினின் சார்பு அணு நிறை = 35.453\n\nஅணுவிலுள்ள புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் எண்ணிக்கையையும், ஆற்றல் உள்ளடக்கத்தையும், அணுக் கருக் கட்டமைப்பையும் பொறுத்துப் பல அணுக்கள் நியூக்ளைடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\nஆக்சிஜனின் அணு எடை 16 என வைத்துக் கொண்டு, தனிமங்களின் அணு எடையைக் கணக்கிடுவதில் உள்ள பல சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக 1960 இல் சார்பு அணு நிறை கருத்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.\n\nசார்பு அணு நிறை அலகு டால்ட்டன் (dalton) எனப்படும். அதைச் சுருக்கமாக (amu) என்பர். அதை u என்ற எழுந்தால் குறிக்கலாம். சார்பு நியூக்ளைடு நிறை எனவும் குறிக்கலாம். —கே.என்.ராமச்சந்திரன்"}}