அகத்தி
akatti
சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும்.
சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாகக் கிளை விடுவதில்லை ஓரடி நீளமுள்ள இரட்டைக் கூட்டிலையுடையது. சுமார் 20, ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளமிருக்கும், நீள்சதுர வடிவமுள்ளது. பூங்கொத்து சிறிய வளர் நுனிக் கொத்து (Raceme). 3-4 பூக்கள் கொண்டது. பூ பெரியது, 2-3 அங்குல மிருக்கும், சாதாரணமாக வெண்மை நிறமுள்ளது. சிவப்புப் பூவும் உண்டு. புல்லி இணைந்தது, மணி
வடிவமுள்ளது , அல்லி வட்டம் அவரைப் பூ வடிவமுள்ளது. மகரந்த கேசரம் பத்து, ஒன்று தனித்தும் ஒன்பது ஒன்றாகச் சேர்ந்தும் இருக்கும். காய் மெல்லியதாக ஓர் அடிநீளமிருக்கும் ; விதைகளுக்கு இடையில் பள்ளமாக யிருக்கும். குறுக்கு வெட்டில் சதுரமாகக் காணும். அகத்திக் கீரையும் பூவும் காயும் கறிசமைப்பார்கள். இந்தச் செடி மருந்துக்கு உதவும். வெற்றிலைத் தோட்டங்களில் கொடி படர்வதற்கும் நிழலுக்கும் நிரம்பப் பயிர் செய்வார்கள். குடும்பம் : பாப்பிலி யோனேசீ (Papilio-nceae). இனம் : செஸ்ப்போனியா கீராண்டிப்ளோரா (Sesbania Grandiflora).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 42)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hcar89gq/
தமிழ்“அகத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcar89gq/APA
Oliyon Research. (2026). அகத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hcar89gq/MLA
"அகத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hcar89gq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment