{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/hcar89gq/", "data": {"id": "hcar89gq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hcar89gq/", "kind": "article", "headword": "அகத்தி", "romanization": "akatti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.000618+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும்.", "body_ta": "சிறிய மெல்லிய வன்மையில்லாத மரம் 20-30 அடி வளரும். அதிகமாகக் கிளை விடுவதில்லை ஓரடி நீளமுள்ள இரட்டைக் கூட்டிலையுடையது. சுமார் 20, ஜதை சிற்றிலைகள் உண்டு. சிற்றிலை ஓர் அங்குல நீளமிருக்கும், நீள்சதுர வடிவமுள்ளது. பூங்கொத்து சிறிய வளர் நுனிக் கொத்து (Raceme). 3-4 பூக்கள் கொண்டது. பூ பெரியது, 2-3 அங்குல மிருக்கும், சாதாரணமாக வெண்மை நிறமுள்ளது. சிவப்புப் பூவும் உண்டு. புல்லி இணைந்தது, மணி\n\nவடிவமுள்ளது , அல்லி வட்டம் அவரைப் பூ வடிவமுள்ளது. மகரந்த கேசரம் பத்து, ஒன்று தனித்தும் ஒன்பது ஒன்றாகச் சேர்ந்தும் இருக்கும். காய் மெல்லியதாக ஓர் அடிநீளமிருக்கும் ; விதைகளுக்கு இடையில் பள்ளமாக யிருக்கும். குறுக்கு வெட்டில் சதுரமாகக் காணும். அகத்திக் கீரையும் பூவும் காயும் கறிசமைப்பார்கள். இந்தச் செடி மருந்துக்கு உதவும். வெற்றிலைத் தோட்டங்களில் கொடி படர்வதற்கும் நிழலுக்கும் நிரம்பப் பயிர் செய்வார்கள். குடும்பம் : பாப்பிலி யோனேசீ (Papilio-nceae). இனம் : செஸ்ப்போனியா கீராண்டிப்ளோரா (Sesbania Grandiflora)."}}