நேர் மாறு கோணவியல் சார்பு
nēr māṟu kōṇaviyal cārpu
கோணவியலில் sin θ = x என்பதில் θ என்பது கோணத்தையும் sin θ என்பது எண் விகிதத்தையும் குறிக்கும்.
கோணவியலில் sin θ = x என்பதில் θ என்பது கோணத்தையும் sin θ என்பது எண் விகிதத்தையும் குறிக்கும்.
θ = sin-1x என்னும் சார்பு, நேர் மாறு கோணவியல் சார்பு (inverse trignometrical function) எனப் படும். இது நேர் மாறு வட்டச் சார்பு (inverse circular function) எனவும் குறிப்பிடப் படுகிறது.
sin-1 x என்னும் நேர் மாறு சார்பு பன்மதிப்புடையது. \big[ n \pi + \big( -1 \big)^n sin^{-1} x \big] ; \big( n=0,1,2,3,\dots \big) என்பது நேர்மாறு சார்பின் பொது மதிப்பு எனப் படும். எனவே, sin^{-1}x = n \pi + (-1)^{n} sin^{-1}x ; n=0,1,2,3,\dots ஆகும். இங்கு sin-1x என்பது நேர் மாறு சார்பின் மிகச் சிறிய எண் மதிப்பைக் குறிக்கிறது. இது அச்சார்பின் முதன்மை மதிப்பு (principal value) எனப் படும்.
இதே போல cos-1x, tan-1x ஆகியவற்றின் நேர் மாறு சார்புகளை வரையறுக்கலாம். இவற்றின் பொது மதிப்புகள் cos ^{-1}x = 2n \pi \pm cos^{-1}x; tan^{-1}x = n \pi + tan ^{-1}x ஆகும்.
sin-1x, tan-1x ஆகிய நேர் மாறு சார்புகளின் முதன்மை மதிப்பு [-π/2, π/2] என்னும் இடைவெளியிலும், cos-1x இன் முதன்மை மதிப்பு (0, π) என்னும் இடைவெளியிலும் அமைந்திருக்கும். sin-1x = θ எனில், x = sinθ ஆகும்.
\frac{1}{x} = \frac{1}{sin \theta} , \frac{1}{x} = cosec \theta , cosec^{-1}\big[ \frac {1}{x} \big]= \theta ஆகும்.
எனவே, sin^{-1}x = cosec^{-1}\big[ \frac {1}{x} \big] ஆகும்.
இதே போல, cos^{-1}x = sec^{-1}\big[ \frac{1}{x}\big] எனவும், tan^{-1}x = cot^{-1} \big[ \frac{1}{x} \big]எனவும் குறிப்பிடலாம்.
மேலும், sin^{-1}x என்பதை arc \;sin x எனவும், cos^{-1}x ஐ arc \; cos x எனவும், tan^{-1}x ஐ arc \; tan x எனவும் குறிப்பிடலாம். —பெ. துரைசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 233)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h8har3av/
தமிழ்“நேர் மாறு கோணவியல் சார்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h8har3av/APA
Oliyon Research. (2026). நேர் மாறு கோணவியல் சார்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h8har3av/MLA
"நேர் மாறு கோணவியல் சார்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h8har3av/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment