செண்டு அவசுதா (Zend Avestha) என்ற சொராத்திரிய வேதத்தில் குறிப்பிடப் பெற்றுள்ள தீய தேவதையாகும். ஆகூரா மாசுதா எனும் தெய்வம் நற்கொள்கையின் உருவகம். சொராத்திரரின் கொள்கைப்படி உலகில் ஒரு கடவுள்தான் உண்டு. அவர்தாம் நற்கொள்கையின் உருவகமாகிய ஆகூரா மாசுதா (Ahura Mazda). அகிரிமனுக்கும் ஆகூரா மாசுதாவுக்கும் ஓயாத போராட்டம் நடைபெற்று வருவதாகவும் இறுதியில் ஆகூரா மாசுதாவே வெற்றி பெறுவதாகவும் சொராத்திரர்கள் நம்புகிறார்கள்.