ஆஸ்பர்ன், ஹென்ரி, பேர்பீல்டு
āsparṉ, heṉri, pērpīlṭu
ஆஸ்பர்ன், ஹென்ரி, பேர்பீல்டு (1857-1935) அமெரிக்கத் தொல்லுயிர் விஞ்ஞானி.
ஆஸ்பர்ன், ஹென்ரி, பேர்பீல்டு (1857-1935) அமெரிக்கத் தொல்லுயிர் விஞ்ஞானி. விலங்கியல் ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்தார். பரிணாம்வாதம் பற்றிப் பல ஆராய்ச்சி நூல்கள் எழுதியிருக்கின்றார். கிரேக்கர் முதல் டார்வின்வரை, பாலூட்டிகளின் காலம், ஹக்ஸ்லியும் கல்வியும், பழங் கற்கால மனிதர், உயிரின் தோற்றமும் பரிணாமமும் என்பவை இவர் எழுதின நூல்கள். இவையெல்லாம் ஆங்கில மொழியின. இவர் அமெரிக்க இயற்கை விஞ்ஞானப் பொருட்காட்சிச் சாலைக்கு இருபத்தைந்து ஆண்டுகள் தலைவராக இருந்தார். இவரது ஆட்சியிலே அது உலகத்திலுள்ள மிகப் பெரிய பொருட்காட்சிச் சாலைகளில் ஒன்றாக வளர்ந்தது. அங்கு இவர் சேர்த்து வைத்திருக்கும் முதுகெலும்புப் பிராணிகளின் பாசில் தொகுதி மிகச்சிறந்தது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 543)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h242j6wn/
தமிழ்“ஆஸ்பர்ன், ஹென்ரி, பேர்பீல்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h242j6wn/APA
Oliyon Research. (2026). ஆஸ்பர்ன், ஹென்ரி, பேர்பீல்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h242j6wn/MLA
"ஆஸ்பர்ன், ஹென்ரி, பேர்பீல்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h242j6wn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment