தென் உருசியாவில் உள்ள பெரியதும் ஆழம் குறைந்ததுமான உள்நாட்டுக்கடல், இதனைக் கருங்கடலுடன் கெர்ச்சு (Kerch) நீர்ப்பிரிவு இணைக்கிறது. இதன் பரப்பளவு 37,550 ச.கி.மீ. ஆழம் 15 மீ. இக்கடலின் மேற்கு முனையைச் சிவாசு (Sivash) அல்வது பூட்ரிட் (Putrid) கடல் என்பர். இம்முனையில் பல தீநாற்றமுள்ள சதுப்பு நிலங்களும், உப்பங்கழிகளும் உள்ளன. அசாபுக் கடலின் (Azov Sea) பகுதியான தாகான்ராக்கு (Taganrog) வளைகுடாவில் தான் ஆறு (Don) கலக்கிறது. இவ்வளைகுடா, கடலின் வடகிழக்கு முனையில் அமைந்துள்ளது. குளிர் காலத்தில் இக்கடலில் கப்பற் பயணம் செய்வது தொல்லைகள் நிறைந்ததாகும். ஏனெனில், பனியும் புயலும் கப்பற் பயணத்திற்கு ஊறு செய்யவல்லவை.