அஞ்சில் அஞ்சியார்
añcil añciyār
சங்கப் புலவர்களுள் ஒருவர்.
சங்கப் புலவர்களுள் ஒருவர். அஞ்சில் என்னும் ஊரினராதலின் இவர் ஊரோடு சேர்த்து அஞ்சிலஞ்சியார் என அழைக்கப்பட்டார் என்று சிலரும், பாடலில் அமைந்துள்ள அஞ்சில் என்னும் தொடரினை அடைமொழியாகக் கொண்டு இவர் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். அஞ்சி என்பது தகடூரைத் தலைநகராகக்கொண்ட சிறிய நாட்டை ஆண்டு வந்த அதியரைக் குறிக்க வழங்கிய பெயராகும். எனவே, அஞ்சில் அஞ்சியார் அதியர் குடியில் வந்தவராதல் வேண்டும் என்று கருத இடமுண்டு. இவர் பாடிய பாடலாக நமக்குக் கிடைத்திருப்பது நற்றிணை 90-ஆம் பாடல் ஒன்று மட்டுமேயாம். மருதத் திணையைச் சார்ந்த இப்பாடல், தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயில் மறுக்கும் துறையில் அமைந்துள்ளது. இப்பாடலால் ஆடைக்குக் கஞ்சி தோய்த்து அணியும் பழக்கமும், ஆடைகளில் பூ வேலைப்பாடு செய்யும் திறமும், பனை நாரினால்
கயிறு திரிக்கும் பயிற்சியும் பழந்தமிழர் பெற்றிருந்தமையினை உணரமுடிகிறது. வே.கா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 200)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gttjr95w/
தமிழ்“அஞ்சில் அஞ்சியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gttjr95w/APA
Oliyon Research. (2026). அஞ்சில் அஞ்சியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gttjr95w/MLA
"அஞ்சில் அஞ்சியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gttjr95w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment