துருக்கி நாட்டின் நான்காவது பெருநகரம். செய்கான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம், மத்திய தரைக்கடலுக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவிலும், துருக்கிக் குடியரசின் தலைநகரான அங்காராவின் தென்கிழக்கில் 386 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெருமளவில் பருத்தி உற்பத்தியாகும் மாவட்டத்தின் மையமாக அதானா (Adana) அமைந்துள்ளது. இங்குள்ள பஞ்சாலைகள் சிறப்பாகப் பருத்தி ஆடைகளை நெய்கின்றன. இந்நகர் பண்டைய உரோமானியரின் குடியேற்றப் பகுதியாய் இருந்தது. எனவே, இஃது ஓர் இராணுவத் தளமாகவும் இருந்திருக்கக் கூடும். மக்கள் தொகை 5,74,515 (1980).