அதானா
atāṉā
துருக்கி நாட்டின் நான்காவது பெருநகரம்.
துருக்கி நாட்டின் நான்காவது பெருநகரம். செய்கான் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரம், மத்திய தரைக்கடலுக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவிலும், துருக்கிக் குடியரசின் தலைநகரான அங்காராவின் தென்கிழக்கில் 386 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பெருமளவில் பருத்தி உற்பத்தியாகும் மாவட்டத்தின் மையமாக அதானா (Adana) அமைந்துள்ளது. இங்குள்ள பஞ்சாலைகள் சிறப்பாகப் பருத்தி ஆடைகளை நெய்கின்றன. இந்நகர் பண்டைய உரோமானியரின் குடியேற்றப் பகுதியாய் இருந்தது. எனவே, இஃது ஓர் இராணுவத் தளமாகவும் இருந்திருக்கக் கூடும். மக்கள் தொகை 5,74,515 (1980).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 330)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gru6jgyu/
தமிழ்“அதானா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gru6jgyu/APA
Oliyon Research. (2026). அதானா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gru6jgyu/MLA
"அதானா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gru6jgyu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment